• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:53:31    
மீனா

cri
அன்புடைய நேயர்களே! நான் மீனா. 2002ஆம் ஆண்டு ஜுலை திங்கள், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவில் சேர்க்கப்பட்டு, 6 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சீன வானொலி நிலையத்தில் சேர்ந்ததும், ஆசிரியரின் கற்பித்தலுடன், தமிழ் மொழியை கற்கத் துவங்கினேன். 2004ஆம் ஆண்டு முதல், செய்தி, செய்தித்தொகுப்பு, சிறப்பு நிகழ்ச்சிகளின் மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றேன். கடந்த சில ஆண்டுகளில், மக்கள் சீனம், சீனச் சமூக வாழ்வு, சீனத் தேசிய இனக் குடும்பம், சீன இசை, நேயர் விருப்பம் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்றேன். இவ்வாண்டு, நேயர்களின் கடிதங்களை கையாளும் பணியைத் தவிர, சீனச் சமூக வாழ்வு மற்றும் சீன மகளிர் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்கின்றேன். எனக்கு மகிழ்ச்சி தருவது, இந்நிகழ்ச்சிகளின் மூலம், நேயர்களுக்கு சீனா பற்றிய புரிந்துணர்வு அதிகரித்துள்ளது என்பதாகும். கடந்த 6 ஆண்டுகளில், நானும் நேயர்களாகிய நீங்களும் பரஸ்பரம் புரிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக, சீனாவில் பயணம் மேற்கொண்ட நேயர்ளுடன் நேரடியாக தொடர்புக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில நேயர்கள் எனது நண்பர்களாக மாறி, என் மீது அன்பு செலுத்துகின்றனர். அவர்களின் அன்பு, என்னை மனமுருகச்செய்கிறது. நான் பணியில் தொடர்ந்து பாடுபடுவதற்கு இது உந்து விசையாக திகழ்கின்றது. கடந்த 6 ஆண்டுகளில், பல நேயர்கள் எனக்கு கடிதம் எழுதுவதன் மூலம் எனக்கு பெரும் ஆதரவும் ஊக்கமும் அளித்திருக்கின்றனர். இந்த ஆதரவு மற்றும் ஊக்கம், என்னைப் பொறுத்த வரை மிகவும் அரிதானவை. இங்கு, நேயர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள் தெரிவிக்க விரும்புகின்றேன்.

வரும் ஆகஸ்ட் திங்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பெய்சிங்கில் நடைபெற உள்ளது. உலகளவில் உள்ள மக்கள் சீனா மீது கவனம் செலுத்துகின்றனர். இதனால், எனது கடமை அதிகரித்துள்ளது. நேயர்களாகிய உங்களுக்கு சீனா பற்றிய எல்லாவற்றையும் அறிமுகம் செய்யும் பொருட்டு, என்னால் இயன்றதனைத்தையும் செய்வேன். தங்களின் புரிந்துணர்வு, குறிப்பாக பொறுமையை எதிர்பார்க்கின்றேன். எந்த யோசனை அல்லது கருத்து உங்களுக்கு இருந்தாலும், எனக்கு கடிதம் எழுதுங்கள்.

எதிர்காலத்தில், தமிழ் ஒலிபரப்பு உங்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் என்று நம்புகின்றேன். எங்கள் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேளுங்கள். இதற்கிடையில், வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் சீனாவுக்கு வருகை தாருங்கள்.

இறுதியாக, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இன்பமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.