• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 09:16:36    
சீன ஹெர் நான் மாநிலத்தின் உணவு வகை ஒன்று 2

cri
க்ளீட்டஸ் – முதலில், தக்காளி பழத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். காளானை கையால் சிறிய துண்டுகளாக பிரித்து வைக்கவும்.
வாணி – கோழி இறைச்சியை 3 மில்லி மீட்டர் அளவுடைய பொடித் துண்டுகளாக நறுக்கவும். ஒரு தேக்கரண்டி மாவு கரைசல், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை இறைச்சி துண்டுகளுடன் கிளறவும்.


க்ளீட்டஸ் – அடுத்து, வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதில் சமையல் எண்ணெயை ஊற்றவும். மிதமான சூட்டில், இறைச்சி துண்டுகளை தனித்தனியாக வறுக்கவும்.
வாணி – கோழி இறைச்சி துண்டுகளை வெளியே எடுத்து தட்டில் வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை வைத்து கொண்டு. அதில் நறுக்கி வைக்கப்பட்ட தக்காளியையும் காளானையும் கொட்டி, வதக்கவும். சிறிதளவு உப்பும் சேக்க வேண்டும்.


பிறகு, அதில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றவும். சூப் சூடான பின், பட்டாணிகயையும், கோழி இறைச்சி துண்டுகளையும் அதில் கொட்டவும்.
க்ளீட்டஸ் – இனி, எஞ்சிய மாவு கரைசலை, அதில் ஊற்றுங்கள். பின்னர், நன்றாக கிளற வேண்டும். கடைசியில், வெள்ளை மிளகுத் தூள், காடி, கொத்த மல்லி ஆகியவற்றை சூப்பில் சேர்க்கவும்.
வாணி – இன்றைய கோழி இறைச்சி சூப் தயார்.


வாணி – ஹெ நான் மாநிலத்தின் உணவு வகைகளில் காடி, வெள்ளை மிளகு மாவு ஆகியவை இன்றியமையாகவை. நேயர்கள் தங்கள் சுவைக்கேற்றார் போல் அவற்றைப் பயன்படுத்தலாம்.
க்ளீட்டஸ் – ஆமாம், மேலும், இந்த சூப்பில் அதிக பொருட்கள் உள்ளன. அல்லவா? ஆகையால், சேர்க்கப்படும் தண்ணீரின் அளவை தங்கள் விருப்பப் படி அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.


வாணி – மேலும், கோழி இறைச்சியை வறுக்கும் போது, சமையல் எண்ணெயின் வெப்பத்தை நன்றாக கட்டுப்படுத்தி வறுக்க வேண்டும். பொதுவாக கூறின், 60 சென்டிகிரேட் முதல் 80 வரை இருந்தால் மிக்க நல்லது.
க்ளீட்டஸ் – கூடுதலான தகவல்களை அறிந்து கொள்ள எமது இணையதளத்தைப் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பதை வரவேற்கின்றோம்.