• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 09:20:19    
நேயர்களின் கருத்து

cri
க்ளீட்டஸ்: கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி குறித்து கதிர்நாயக்கன்பட்டி எஸ். பாரதி எழுதிய கடிதம். பெய்சிங் மாநகரின் போக்குவரத்து பற்றி கலையரசி அம்மையாரும், தமிழன்பன் அவர்களும் அழகான முறையில் வழங்கிய தகவல்கள் கேட்டேன். 13 சுரங்கவழி இருப்புப்பாதைகள், 9400 பேருந்துகள் பெய்சிங்கில் இயங்குகின்றன என்பதை அறிந்தேன். சீனப் பாரம்பரிய விழாக்கள் பற்றியும் கூறியமை பாராட்டுக்குரியது.
கலை: திருச்சி மணக்கால் இரா. அன்பழகன் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் இடம்பெறும் அனைத்து தகவல்களும் சிறப்பானவை. உலகின் பல தகவல்களை ஒன்று திரட்டி நேயர்களுக்கு மலர்ச்சோலை நிகழ்ச்சியின் சீன வானொலி தமிழ்ப்பிரிவு வழங்கி வருகிறது. அறிவுக்கடலில் இது சிறுதுளியே. ஆயினும், சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல நேயர்களின் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள இது பெரிதும் உதவும்.
க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி எம். ஐ. எஃப். நஸ்ஸியா எழுதிய கடிதம். சீன வானொலி நேயர் வரிசையில் நானும் சேர்ந்ததில் மகிழ்ச்சி. ஆணித்தரமான கருத்துக்களும், அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளும் வழங்கும் சீன வானொலி மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமைகின்து. வளர்க சீன வானொலி.

கலை: சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி குறித்து பெரியகாலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். 56 தேசிய இனங்களை கொண்ட பெரிய குடும்பமாக இருந்தாலும், சீனா இவ்வினங்களின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாத்து, பயனுள்ள முறையில் வளர்த்து வருகிறது. அந்த வகையில் திபெத்தின் வளர்ச்சியை பார்க்கையில், அங்குள்ள பள்ளிகளில் திபெத் மொழியும், சீன மொழியும் கற்று தரப்படுகின்றன. இரு மொழிக்கலவி சிறப்பாக வளர்ந்து வருகிறது என்பதை அறிந்துகொண்டோம்.
க்ளீட்டஸ்: விழுப்புரம் ஆர். விஜயரங்கன் எழுதிய கடிதம். சீன வானொலியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேட்டு வருகிறேன். இடையில் கடிதத்தொடர்பு இல்லையென்றாலும், வானொலி நிலையத்தின் சீனச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களது நலன் அறிய ஆவல் கொண்டு கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்க முயற்சி செய்து வருகிறேன்.
கலை: அன்பு விஜயரங்கன், தங்கள் அன்பான கடிதத்திற்கு எமது நன்றிகள். தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு, கடிதங்கள் மூலம் ஆதரவளித்து உற்சாகமூட்டுவீர்கள் என்று நம்புகிறோம்.
தொடர்ந்து, இலங்கை சாய்ந்தமருது, எம். எச். எம். சியாத் எழுதிய கடிதம். சீன வானொலி தித்திக்கும் பல நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு வழங்கி வருகிறது. கேட்டுக்கொண்டே இருக்கக்கூடிய பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கும் சீன வானொலி, நேயர்களின் அறிவை வளர்க்க உதவுகிறது. சிந்தனையைத் தூண்டி, உள்ளத்தில் உவப்பு ஏற்படுத்தும் சீன வானொலியின் சேவை தொடர்வேண்டும்.
மின்னஞ்சல் பகுதி
......பாண்டிச்சேரி. ஜி. ராஜகோபால்......
27.06.2008 அன்று ஒரு மகத்தான , சிறப்பான , அருமையான, சுவையான கேள்வி-பதில் நிகழ்ச்சியை படைத்த உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். 43 மொழிப்பிரிவுகளில் மிகவும் தலைசிறந்த வானொலிப் பணியாளராக திருமதி கலையரசி அவர்கள், 43 மொழிப் பிரிவு நேயர்களில் முதன்மையான நேயராக எங்களின் அருமை நண்பர் திரு.எஸ். செல்வம் அவர்கள் ஆகியோரை சீன வானொலி நிலையம் தேர்ந்தெடுத்திருப்பது மிக சாதாரண செயல் அல்ல... அவரது சாதனைகள் நிச்சயம் ஒருநாள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவது உறுதி. திருமதி கலையரசி அவர்கள் என்றும் பதினாறு வயது பாவையாக சுறுசுறுப்பாக வேலை செய்வதில் கெட்டிக்காரர். அவரை நேரில் சந்தித்தவர்களுக்குத்தான் அவரது சுறுசுறுப்பை பற்றி தெரியும். இவ்வளவு ஆண்டுகளாக எவராலும் செய்ய முடியாத சாதனைகளை செய்த திருமதி கலையரசி, திரு.எஸ்.செல்வம் இருவருக்கும் மட்டுமல்ல... ... சீன வானொலிக்கும் வாழ்த்துக்கள்.
.

.....ஊட்டி ஏ.வினோத்.....
03.07.2008 அன்றைய செய்திகளில் சீன வானொலி நிலையம் நடத்திய பெய்ஜிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற அமெரிக்கா, ஜெர்மனி, தான்சானியா முதலிய நாடுகளைச் சேர்ந்த 8 நேயர்கள் இன்பமான சீனப் பயணத்தை முடித்து கொண்டது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரமான சிங் தாவை விட்டு புறப்பட்டுச் சென்றதை அறிந்தேன். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
......வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்......
சூலைத் திங்கள் 4 ஆம் நாள் இடம்பெற்ற இரண்டாவது •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில் •பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்பு மற்றும் வெற்றிக்கு உத்தரவாதம் செய்வது• என்ற கட்டுரையைக் கேட்டேன். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் காலத்தில், கிழக்கு தூஜேஸ்தான் அமைப்பின் மூலம் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற தகவல் உண்மையில் எனக்கு கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால், இதர துறைகளில் சீனா எவ்வாறெல்லாம் சரியாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறதோ, அவ்வாறு பாதுகாப்புத் துறையிலும் சரியான, வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றாக அழித்தொழிக்கும் என நான் உறுதியாக நம்புகின்றேன். பல்வேறு வலைப்பின்னல் அமைப்புக்களை நிறுவி இந்தப் பிரச்னையை உறுதியுடன் எதிர்கொண்டு, தன்னுடைய சாதனை மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை சீனா பதிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
பாண்டிச்சேரி, N. பாலகுமார்

"சீன-அமெரிக்க 4வது உத்திநோக்கு பொருளாதாரப் பேச்சுவார்த்தை" என்ற தலைப்பிலான செய்தித்தொகுப்பை கேட்டேன். சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங் ச்சி சான் மற்றும் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
இரு நாட்டு மக்களுக்கும் பயன் அளிக்க்கூடிய வகையில் நடந்தது என்று நம்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே உள்ள உள்பகையை மறந்து இரு தரப்புகளும் இந்த பொருளாதாரப் பேச்சுவார்த்தை நடத்தியதை, ஆக்கப்பூர்வமானதாக கருதி வரவேற்கிறேன்.
சர்வதேச தமிழ்ப்பணி மன்றம், பொன் ஏழிசை வல்லபி
சீன வானொலி தமிழ்ப்பிரிவுத் தலைவர் தி.கலையரசி அவர்கள் முன்னேறிய பணியாளராக தேர்வு செய்யப்பட்ட தகவலை அறிந்தேன். இந்தப் பெருமைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர். தமிழ்ப்பிரிவின் வளர்ச்சிக்கு அயராது உழைக்கும் தமிழ்ப்பணி குடும்பத்தின் வழிகாட்டியாக திகழும் அவருக்கு முன்னேறிய பணியாளர் விருது வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமானதே. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
பாண்டிச்சேரி, என். வசந்தி
ஜூலை முதல் நாளன்று இடம்பெற்ற •சீனப் பண்பாடு• நிகழ்ச்சியில் •சீன வேளாண்மை• என்ற கட்டுரையை செவிமடுத்தேன். கிட்டத்தட்ட ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவில் வேளாண் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது என்பதை கேட்டபோது மிகவும் வியப்பாக இருந்தது. பல்வேறு துறைகளில், உலகிற்கு சீனா முன்னோடியாக இருந்தது போல, வேளாண்மை துறையிலும் முன்னோடியாக இருந்ததை புரிந்து கொண்டேன்.
…….சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி……
ஜுலை திங்கள் 4ம் நாள் அன்று இடம்பெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் சிறப்பு செய்திகளை கேட்டேன். வங்காள தேச நாட்டு சீனத் தூதுவரான திரு பயஸ் அகமதின் ஒலிம்பிக் மீதான ஆர்வத்தை அறிந்துகொண்டேன். இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை கேட்கும்போது எனக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி எப்போது துவங்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டு இருக்கின்றோம் என்றால் மிகையாகாது.