அடியக்கமங்கலம், எம். எஸ். பசீர் அஹ்மது
cri
"வானொலி கேட்கும் நேரம் வாழ்வில் உன்னத நேரம்" என்கிறார் கவிஞர் வைரமுத்து. 45 ஆண்டு காலமாக தென்றலாய் வீசி வருவது சீன வானொலியின் தமிழ் ஒலி. கற்றலினும் கேட்டலே நன்று என்பது தமிழ்ச்சுவை. அன்னப்பறவையும், வானொலியும் ஒன்றுதான். ஏனென்றால், அன்னப்பறவை பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கிறது. வானொலி பல தரமற்ற ஒலிகளுக்கிடையே இருந்து தரமான சீன வானொலியின் தமிழ் ஒலியை பிரித்தெடுக்கிறது. 43 மொழிகளிலான ஒலிபரப்பில் அதன் விரிந்த இறகுகள் உலகையே தனக்குள் அரவணைத்துக் கொண்டுள்ளன. இதையே தான் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி கொள்கை முழக்கமான, "ஓர் உலகம்; ஒரு கனவு" எனும் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. அழகு தமிழுக்கோர் ஒலிபரப்பு என்றால் அது சீன வானொலி தமிழ் ஒலிபரப்புதான். முறையாக தமிழ் பயின்ற சீனர்களே நிகழ்ச்சியை பிறமொழி கலக்காமல் தூய்மையாக அறிவிப்பது உலகில் எந்த வானொலிகளிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இது 45 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுவது உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய சாதனையாகும். சீன வானொலி உலக மாக்கடல். அதில் அறிவமுதம் பருகி உல்லாசமாக நீந்திக் கொண்டிருக்கும் மீன்களே நேயர்கள். நேயராகிய நானும் இவ்வையகம் உள்ளவரை நீந்திக் கொண்டிருக்கவே வாழ்கின்றேன்.
|
|