• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 16:37:48    
ஆரணி, ஜெ.அண்ணாமலை –071322

cri
நீலக்கல் ஆண்டாம் தனது 45 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சீன வானொலி தமிழ்ப் பிரிவு
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
"விரிகடல் சூழ் உலக முழுவதும் நம் ஊரே"என்றும்,
"விழியும் ஒளியும்" போல மக்கள் எல்லாம் நம்முறவே
என்ற "சங்கத் தமிழின் தங்கவரிகளாக" செயல்படுகின்றது. பிறமொழி கலப்பில்லாமல் நல்ல தமிழில் நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்களுக்கு பயனுள்ள தகவல்கள் தருவது சிறப்பு. சீனா தற்போது ஒரு திறந்த புத்தகம் என்பதை உணர்கின்றேன். திரு.S.செல்வம், திரு.பல்லவி.கே.பரமசிவம் மற்றும் தமிழ் திரைப்பட நகைச்சுவை முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள், சென்னை வானொலி நிலைய இயக்குனர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள், லேனா தமிழ்வாணன், தென்கச்சி.கோ. சுவாமிநாதன் மற்றும் உவமைக்கவிஞர் சுரதா, ஆகியோரிடம் எடுக்கப்பட்ட பேட்டி "உங்கள் குரல்" நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பப்பட்டது. இது ஆரணி சீன வானொலி நேயர் மன்றம் படைத்த "வரலாற்றுச் சுவடுகள்". 77 வயதை கடந்த நான் இனிவரும் காலங்களிலும் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதிலும், அனைத்து நேயர்களையும் உற்சாகப்படுத்துவதிலும், மன்ற வளர்ச்சிக்கு பங்காற்றுவதிலும் பாடுபடுவேன். "செம்மொழி" பேசும் சீன வானொலி தமிழ்ப் பிரிவு நேயராக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.