1963 ஆகஸ்ட் முதல் நாள் அன்று துவங்கிய சீன வானொலி தமிழ் ஒலிபரப்புச் சேவை நாளுக்கு நாள் சீனப் பெருஞ்சுவராய் நீண்டு வருகிறது. சீன வரலாற்றை, பண்பாட்டை, மொழியைப் பிறருக்கு அறிவுறுத்தி அவற்றை வாழ வைத்து, உலகிற்கே வழிகாட்டுவது சர்வதேச சீன வானொலி. மனித மற்றும் இயற்கை சக்திகளின் ஆற்றல்களையும், மொழிப்பற்றையும் முறையாக பயன்படுத்தினால் முன்னேற்றம் காணலாம் என்பதை உலகிற்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்வு நெறிமுறைகள் அனைத்தையும் சீன வானொலி கற்பிக்கிறது. சங்கம் கண்டு பாண்டியர் தமிழை வளர்த்தனர். வங்கம் கடந்து சேர, சோழர் தமிழ் பரப்பினார். தங்கத் தமிழைத் தாயெனக் கொள்ளும் மக்களைச் சங்கமிக்கச் செய்வது சீன வானொலி ஒன்று தான். மஞ்சள் ஆற்றுப்பகுதியில், பிறந்த நாளும் விஞ்சும் வகையில் வளர்ந்து வாழும், சீனக் கொஞ்சும் தாயின் குழந்தைகள் பேசும் தமிழ், மஞ்சுகுழும் வானில் வந்திடும் வண்ணமாய் ஒலிபரப்பு செய்கின்றனர். உண்மையும் உழைப்பும் நாளுக்குநாள் நேயர்களின் எண்ணிக்கையை வளர்த்து, காலப்போக்கில் சீன மக்கள் தொகையோடு போட்டிபோடும்.
|