எதிர்வரும் சில ஆண்டுகளில், வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புப் பிரதேசங்களின் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியை வலுப்படுத்தி, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைத் தரத்தை திபெத் மேம்படுத்தும். சீன திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசிலிருந்து இத்தகவல் கிடைத்தது.
திட்டத்தின்படி, 2010ம் ஆண்டுக்குள், திபெத், குடிநீர்க் குழாய், குழாய் கிணறு, வீடுகளில் கையடி குழாய் கிணறு முதலிய திட்டப்பணிகளின் மூலம், 10 இலட்சத்து 70 ஆயிரம் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடிநீர் பாதுகாப்பு பிரச்சினையை பயனுள்ள முறையில் தீர்க்கும். அதே வேளையில், உரிய பிரதேசங்களில், மீத்தேன் வாயு, நீராற்றல், சூரிய ஆற்றல் முதலிய தூய்மையான எரியாற்றல்களை பரவல் செய்யும்.
கிராமப்புறத் தோற்ற மேலாண்மையின் உள்ளடக்கமாக, திபெத் வாழ்க்கைக் கழிவுப் பொருட்களை கொண்டுசெல்லும் முறைமையை நிறுவி, வாழ்க்கைக் கழிவுப் பொருட்களை தீங்கற்ற முறையில் அழிக்கும் நிலையை உயர்த்துகிறது.
|