சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், வெளிநாட்டு பயணிகளுக்கான சுற்றுலாவைத் திறந்து வைத்த ஒரு திங்களில், ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்காசியா, வடகிழக்காசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயணிகளின் எண்ணிக்கை, நிதானமாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கான திபெத்தின் சுற்றுலா, முழுமையான மீட்சிக் கட்டத்தில் நுழைந்தது.
ஜூலை திங்களில், திபெத்தின் சுற்றுலாத் துறை, விரைவாக மீட்கப்படத் துவங்கியது. அடுத்த ஆண்டின் மே திங்களிலான சுற்றுலா நிலைமை வரலாற்றில் அதே காலத்தில் இருந்த நிலைமைக்கு மீட்கப்படலாம் என்று மதிப்பிடப்படுகிறது. தற்போது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், திபெத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளினல் சுமார் 70 விழுக்காடு வகிக்கின்றனர். கோடைகால விடுமுறையின் வருகையுடன், தென்கிழக்காசிய மற்றும் வடக்கிழக்காசிய நாடுகளின் சுற்றுலாக் குழுக்களும், திபெத்திற்கு புறப்படத் துவங்குகின்றன. திபெத்துக்கு வந்த சுற்றுலாக் குழுக்களின் அளவு குறிப்பிடத்தக்கவாறு அதிகரித்துள்ளது.
|