• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 14:31:03    
இளம் படைவீரர் தெங் சியாங் பற்றிய கதை

cri

இந்தக் கட்டுரையில் இளம் படைவீரர் ஒருவர் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன். அவரது பெயர் தெங் சியாங்.

1982ஆம் ஆண்டில் பிறந்த தெங் சியாங், சிச்சுவான் மாநிலத்தின் து ஜியாங் யன் நகரைச் சேர்ந்தவர். 2005ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை முடித்துக் கண்ட அவர், படையில் பணிபுரிந்த தந்தையின் ஊக்கத்துடன், படையில் சேர்ந்தார். பல்கலைக்கழக மாணவரிலிருந்து சாதாரண ஒரு படைவீரராக மாறிய அவர், தொடக்கத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

"படையில் சேர்ந்த நான் குன் மிங் தரைப்படை கழகத்தில் தங்கியிருந்தேன். அந்தச் சூழ்நிலை பல்கலைக்கழகத்தின் சூழ்நிலையிலிருந்து வித்தியாசமானது. அப்போதைய புதிய படைவீரருக்கான பயிற்சி மிகவும் கடினமாக இருந்தது. அக்காலத்தில் எனது தந்தை தொலைபேசி மூலம் எனக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் அளித்து வந்தார். தொலைபேசி மூலம் என்னை ஊக்குவித்து ஆதரிக்குமாறும் படையில் ஊன்றி நிற்குமாறும் எனது நண்பர்களை அவர் கேட்டுக் கொண்டார்" என்றார் தெங் சியாங்.

படையின் சூழ்நிலைக்கு ஏற்ப படிப்படியாக தன்னை மாற்றிக் கொண்ட தெங் சியாங், படையை மிகவும் நேசிக்கிறார். தலைசிறந்த செயல்பாட்டுத் திறனால், துணை கம்பனி தலைவராக இவ்வாண்டு அவர் நியமிக்கப்பட்டார். அவரது பெற்றோர் அவரது முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்தக் குடும்பம் இன்பத்தில் மூழ்கிய போது எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. மே 12ஆம் நாள் வென் ச்சுவான் நிலநடுக்கத்தினால், தெங் சியாங்கி்ன் ஊரான து ஜியாங் யன், கடுமையாக பாதிக்கப்பட்டது. அவரது தந்தை நிலநடுக்கத்தில் உயிரிழந்தார்.

நிலநடுக்கம் நிகழ்ந்ததும் தெங் சியாங் தொலைபேசி மூலம் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் து ஜியாங் யன் நகரின் செய்தித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அன்று மாலை தான், மீட்புதவிப் பணியில் கலந்து கொள்ளுமாறு அவர் சேர்ந்த படைக்கு கட்டளை கிடைத்தது. பெற்றோர் மீதான கவலையுடன் அவர் மீட்புதவிப் பணியின் முன்னணிக்குச் சென்றார்.

மே 14ஆம் நாள், தெங் சியாங் சேர்ந்த படை து ஜியாங் யன் நகரை நோக்கி முன்னேறியது. அவர் சொந்த ஊருக்குத் திரும்பி பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபடத் துவங்கினார். அப்போது து ஜியாங் யன்னின் செய்தித் தொடர்பு மீட்கப்பட்டது. ஆனால், அவரது பணியைப் பாதிக்காமல் இருக்கும் வகையில், அவரது தந்தை உயிரிழந்தார் என்று தகவல் குடும்பத்தினரால் மறைக்கப்பட்டது. மே 15ஆம் நாள் அவரது தந்தையின் பூதவுடல் தோண்டி எடுக்கப்பட்டது. வீடு திரும்பி தந்தையின் ஈமச் சடங்கு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் கட்டளை கிடைத்த போதுதான், தனது தந்தை உயிரிழந்தார் என்று தெங் சியாங் அறிந்து கொண்டார். தந்தையை முன்மாதிரியாகவும் நண்பராகவும் பார்த்த அவருக்கு இத்துன்ப நிகழ்வை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது.

சீன மொழியில் சியாங் என்றால் வலிமை என்று பொருள். தந்தையின் உயிரிழப்பு ஏற்படுத்திய துன்பத்திலிருந்து விடுபடுவது கடினம் என்ற போதிலும், 26 வயதான தெங் சியாங் தன்னை வலிமையுடன் இருக்கச் செய்ய பாடுபட்டு வருகிறார்.

வீட்டில் குடும்பத்தினருடன் இணைந்து சில நாட்கள் தங்கியிருக்க, அவரது படை அவருக்கு ஏற்பாடு செய்தது. ஆனால், அடுத்த நாளே அவர் படைக்குத் திரும்பினார்.

படைக்குத் திரும்பிய தெங் சியாங்கின் தலைமையில், படைவீரர்கள் இடிபாடுகளில் உயிருடன் இருப்பவர்களைத் தேடினார். அந்தப் பணி முடிந்த பின், அவர் படைவீரர்களுடன் இணைந்து சுற்றுப்புறத்திலுள்ள கிராமங்களுக்குச் சென்று, நோய் தடுப்பு மற்றும் மருந்து தெளிக்கும் பணியிலும், பொது மக்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்யும் பணியிலும் ஈடுபட்டார். தந்தை பற்றிய நினைவுடன், பேரிடர் நீக்க மற்றும் மீட்புதவிப் பணியில் தெங் சியாங் தனது பங்கை ஆற்றினார்.