• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 09:25:22    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள மெக்சிகோ தூதரின் நல்வாழ்த்துக்கள் 1

cri
1968ம் ஆண்டில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை முதன் முறையாக நடத்திய வளரும் நாடாக மெக்சிகோ மாறியது. மெக்சிகோவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உருவாக்கியது. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி விரைவில் நடைபெறும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப்

போட்டி மெக்சிகோ மக்களின் விழாவாகவும் மாறியுள்ளது. சீனாவிலுள்ள மெக்சிகோ தூதர் Guajardo, பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். வளரும் நாடான சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தவுள்ளது. இதற்கு மெக்சிகோ ஆதரவு அளித்து வருகின்றது. மெக்சிகோ மக்களின் விழாவாகவும் இது மாறும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு மெக்சிகோ

மக்கள் சீன மக்களுடன் சேர்ந்து, முழு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருக்கின்றனர் என்றார் அவர்.
சீனாவைப் பொறுத்த வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறந்த ஒரு வாய்ப்பாகும். உலகத்திடம் சீனாவின் சிறப்பான புகழை இது முழுமையாக வெளிப்படுத்த முடியும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை Guajardo வெகுவாக பாராட்டியுள்ளார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனா முழுமையாக ஆயத்தம் செய்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முந்தைய மெக்சிகோ போல், ஒரு வளரும் நாடாக ஒலிம்பிக்

விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் மூலம், உலகத்துக்கு சீனா அழைப்பு விடுத்து, மக்கள் அனைவருக்கும் வரவேற்பு தெரிவிக்கிறது. இவ்வளர்ச்சிப் போக்கில் பங்கெடுப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார் அவர்.
கடந்த ஆண்டில் தான் Guajardo சீனாவுக்கு வந்தார் என்றாலும், பெய்சிங்கில் ஏற்பட்ட பல்வகை மாற்றங்கள் அவர் மனதில் ஆழமாக பதிந்துள்ளன.