• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 09:26:21    
வேடனின் வித்தை

cri
நரியைக் கண்டு மான் அஞ்சும். புலியைக் கண்டு நரி அஞ்சும். அந்தப் புலி கூட கரடியைக் கண்டு அஞ்சும். ஆனால் மிகவும் கொடிய விலங்கினம் எது தெரியுமா? அனைத்து விலங்கையும் சூழ்ச்சியால் வீழ்த்தும், ஆறறிவு கொண்ட இரட்டைக் கால் விலங்குதான் அது. ஆம், மனிதன் தான் மிகவும் ஆபத்தானவன். மனிதனின் பார்வையில் மதிநுட்பமாக தெரியும் செயல், மற்ற விலங்குகளின் பார்வையில் வஞ்சகமாக, சூழ்ச்சியாக, ஏமாற்றுஞ் செயலாக தெரியலாம். மனிதன் தனக்கு புறத்தேயுள்ளவற்றில் காட்டும் ஆர்வத்தையும், அறிவாற்றலையும், அகத்தேயுள்ளவற்றில் காட்டினால் மாண்படையலாம்.
முன்பொரு காலத்தில் தெற்கு ச்சு பிரதேசத்தில், ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். அவன் தனது மூங்கில் குழலால் விலங்குகள் பலவற்றின் குரலை அழகாக எழுப்புவதில் வல்லவன்.
மான் போல குரலெழுப்பி, மான்களை ஓரிடத்தே கவர்ந்திழுத்து, அருகே வந்தது அவற்றை அம்பால் வீழ்த்தத் தெரிந்த வல்லவன், அந்த வேடன்.
ஒரு நாள் தனது வழமையான வித்தையை, நளினமாக செய்து நல்ல வேட்டையுடன் வீடு திரும்பும் நோக்கில், குழலெடுத்து ஊதினான் வேடன். மான் போல அவன் குரலெழுப்ப, மான்கள் கூட்டமாய் ஓடி வந்தது அவன் அம்புக்கு இலக்காயினவா என்றால் இல்லை. வந்தது மான் அல்ல, மானை வேட்டையாடி பசியாற நரிதான் வந்தது. மான் பிடிக்க எண்ணியவன் நரியைக் கண்டதும் அஞ்சி, நரியை விரட்ட, புலியின் கர்ஜனையான உறுமலை குழலில் எழுப்பினான். புலியின் கர்ஜனையை கேட்டு நரி ஓடி மறைந்தது ஆனால் தன்னின சகோதரன் கூப்பிடுகிறான் என்றெண்ணியதோ என்னவோ ஒரு புலி நிஜமாகவே அங்கு வந்துவிட்டது. புலியைக் கண்ட வேடன் கிலியில் மூர்ச்சையாகும் நிலையில், கரடியில் குரலை குழலில் எழுப்ப, புலியும், குரல் கேட்டு அங்கிருந்து விலகிச் சென்றது. தலை தப்பியது தம்பிரான் புன்னியம் என்று நினைத்த வேடனுக்கு வந்தது பேராபத்து, புலியை விரட்ட வேடன் எழுப்பிய கரடியின் குரலை கேட்டு ஒரு பெரிய கரடி அங்கே வந்தது. அங்கே இருப்பது தன்னினமல்ல, இரண்டு கால்களால் விசித்திரமாக நடக்கும் ஏதோ ஒரு விலங்கு என்று பார்த்த கரடி, வேடனை பாய்ந்து பிடித்து, கைவேறு கால்வேறாக பிரித்து, பசியாறியது.
மனிதன் தன் அக ஆற்றலை, தன்னிலையை உணர்ந்து தன்னை மேம்படுத்திக்கொள்ள தவறி, வெளிப்புற ஆற்றலை, இன்ன பிற உதவியை சார்ந்திருந்தால், வேடனுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.