திபெத்தின் Taizhao என்ற புரதான நகர்
cri
லாசாவிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Taizhao என்ற பண்டைய நகர், Gongbo Gyamda மாவட்டத்தில் இருக்கிறது. கி.பி.7ம் நூற்றண்டிலிருந்து, 10ம் நூற்றண்டின் தான் வம்சக் காலம் வரை, மஞ்சள் ஆற்றின் மத்திய மற்றும் கீழ்ப்பகுதி பிரதேசங்கள், திபெத்துடன் பரிமாற்றம் செய்த, Tangbo என்ற பழைய பாதையில், இந்த நகர் மிக முக்கிய முனையமாகும். தற்போது, பொது வசதிகள் கொண்ட இடங்களை அமைப்பதற்கு, Gongbo Gyamda மாவட்ட அரசு, 82 லட்சத்துக்கு மேலான யுவானை செலவிட்டது. பழைய பாலத்தின் சிதிலங்கள், கோயில்கள், பண்டைய குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றையும் திருத்தியமைத்து வருகிறது. வரலாற்று தொல் பொருட்கள் மற்றும் மக்களின் பயன்பாட்டு பொருட்களின் சேகரிப்புப் பணியைச் செய்து வருகிறது. அக்டோபர் முதல் நாள் அன்று, Taizhao என்ற பண்டைய நகர், பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்படக் கூடும்.
|
|