• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 15:01:39    
சென்னை-56,ஸ்ரீ சைனா தீபிகா—075418 6

cri
சீன மண்ணில் புகழ் பெற்று, தமிழுக்காய் தன்னை அர்ப்பணித்து தமிழ் நேயர்களுக்கென நாள்தோறும் 4 மணி நேரம் காலை, மாலை இருவேளையும் வானொலி பெட்டியின் வழியே குதித்து என் இதயத்தில் இடம் பிடித்த தமிழ்ப்பிரிவே உனக்கு 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் 46ம் பிறந்த நாளா?
மனிதர்களுக்கு மட்டுமா பிறந்தநாள் கொண்டாடிட வேண்டும். என் நெஞ்சை கவர்ந்த உனக்கு பிறந்த நாள் கொண்டாடிட, இனிய இந்தநாளில் எம்படை புறப்பட்டு விட்டது.
இப்படை போதுமா. இன்னும் வேண்டுமா என மற்றதனை மதிகெடச் செய்து உனக்காக தனி இடம் தரணியில் வழங்கி, உன்னை வாழ்த்தி புகழாரம் சூட்டுகிறோம் நாங்கள். மலர்ந்த மலரில் ஒரு சில தெய்வத்தின் பாதத்தில் சேர்ந்து புகழ் பெறுவது போல், நீ எங்கள் இல்லத்தில் எங்கள் இதயத்தாமரையாகி என்றும் கலைமகள் அமர்ந்து அலங்கரிப்பது போன்று நீங்கா இடம் பிடித்துவிட்டாய்.
நீங்கா புகழ் பெற்ற நீ என்றென்றும் வாழ்க. 45ம் ஆண்டு நிறைவு மட்டுமல்ல, பல நூறாண்டுகள் தமிழ் மண்ணில் நேயர்களின் மனதில் தனி இடம் பிடித்து, புகழ் பெற உன்னை வாழ்த்தி மகிழ்கிறேன்.