• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 15:03:54    
தென் பொன்முடி, தெ.நா. மணிகண்டன் 8

cri
செஞ்சீன மண்ணில் இருந்து செம்மொழியான தமிழ் மொழிக்கு சிற்றலை வானொலி ஒலிபரப்பு துவக்கி, சீனர்களை தமிழ் கற்க செய்து, அவர்களாகவே நிகழ்ச்சிகளையும் வழங்கி 45 ஆண்டு நிறைவு செய்துள்ள எனதன்பு சீன வானொலியே உன்னை வாழ்த்த எனக்கு வயதில்லை. இருப்பினும் உன்னுடன் சேர்ந்து நானும் வானொலி பயணம் செய்வது பெருமையாக உள்ளது. இன்று வரை சீன வானொலியை என் மூச்சுக் காற்றாக சுவாசித்து வருகின்றேன். சீன வானொலி கேட்கத் தொடங்கிய பிறகு, கணினி என்றால் என்னவென்றே தெரியாத நான், கணினியை கற்றுக்கொண்டு சீன வானொலி நிகழ்ச்சிகளை இணையதளத்தில் வாசிக்கவும், கேட்கவும் பயின்றேன். மேலும் மின்னஞ்சல் முலம் எனது கருத்துக்களை தமிழ்ப் பிரிவுடன் பகிர்ந்து கொள்கிறேன். சீன வானொலியின் தனிச்சிறப்புமிக்க சேவைகள் மற்றும் உத்திகள் வேறெந்த வானொலிகளும் செய்ய முடியாத சாதனைகளாகும். எனதன்பு சீன வானொலி தமிழ்ப் பிரிவே உன் சாதனை பயணம் தொடர வேண்டும் அந்த சாதனை பயணத்தில் நானும் சேர்ந்து பயணித்து பயன் அடைய வேண்டும்.