• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 15:07:29    
சென்னை-56, G.ஸ்ரீதரன்—0736659

cri
45 ஆண்டுகளுக்கு முன், தமிழ் மண்ணில் பீக்கிங் தமிழ் ஒலிபரப்பு என்று தவழ்த்து, தள்ளாடி, தளிர் நடை இட்டு, குறுநடை பயின்று, வாலிபனாகி, பின் நட்பு மூலம் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் புதுப்பொலிவு பெற்று சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு என்றாகி பல நேயரை கவர்ந்து தனது நாட்டுக்கு அழைத்து அவர்களை கௌரவித்து சிறப்பு பெற்றது. அதன் வளர்ச்சி அரை மணி நேர ஒலிபரப்பு என்று துவங்கி, இன்று 4 மணி நேரம் என்று பரந்து விரிவடைந்துள்ளது. புழுதிக்காற்று புயலாய் மாறி, இருப்பவற்றை மறைப்பது போன்று, இன்று புயலாக சீறிபாயும் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் தங்கள் திறமைகளால் நேயர் மனதில் புயலாக புகாமல். தென்றலாய் தவழ்வதாலே, அது தனியிடமும். சிறப்பும் பெற்றுவிட்டது.