• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 15:12:54    
அடியக்கமங்கலம், எம்.ஜே. நூருல் அப்ரித் –080791---10

cri
எனது தாத்தா எம்.எஸ்.பசீர் அகமது அவர்களை பின்பற்றி சீன வானொலியில் நேயராக சேர்ந்தேன். 45 ஆண்டு வயதை எட்டி இமயம் போல் உயர்ந்திருக்கும் சீன வானொலியை மலை அடிவாரத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பு போல் நான் அண்ணாந்து பார்த்து பிரமிப்பு அடைகின்றேன். அது கடந்து வந்த பாதையில் சொல்லப்பட்ட செய்திகள், தமிழ்ப் பிரிவு பணியாளர்களின் உழைப்பு, அப்பிரிவில் அடங்கியுள்ள இலட்சக்கணக்கான நேயர்கள், தோற்றுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நேயர் மன்றங்கள் ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டில் 19 ஆண்டு கருத்தரங்குகள், தமிழ்ப் பிரிவு நடத்திய பொது அறிவுப் போட்டிகள், அதில் சிறப்புப் பரிசுப் பெற்ற எட்டு தமிழ் நேயர்கள் சீனாவுக்கு இலவசப்பயணம் ஆகியவை எல்லாம் நான் அறிந்த உண்மைகள். தமிழ்ப் பிரிவு சீனப் பணியாளர் பிரதிநிதிகள் சீனாவிலிருந்து தமிழகம் வருவது எங்களின் உற்சாகத்தை தூண்டும் உந்து சக்தி.