
இலையுதிர் காலத்தில் இம்மலையிலான மரங்களின் இலைகள் சிவப்பாக மாறிவிடும். இங்குள்ள காட்சி எழில் மிக்கது. இம்மலைக்கு அருகில் பெய்சுங் மலை அமைந்துள்ளது.

பெய்சுங் மலையின் அகலமான இடத்தின் அளவு, இரண்டு, மூன்று மீட்டராகும். குறுகியது ஒரு மீட்டர். இம்மலை கரடுமுரடானது. மலையின் இரு பக்கங்களிலும் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. மலையில் நின்று கீழ் நோக்கிப் பார்த்தால் பயமாக இருக்கும். shen nong மலையிலும் வட கிழக்கு சீனாவின் சாங்பெய் மலையிலும் மட்டும், வெண்ணிற தேவதாரு மரங்கள் காணப்படுகின்றன.

இத்தகைய தேவதாரு மரங்களின் வயது 400 ஆண்டுகளைத் தாண்டினால் தான், அவை வெண்ணிறமாகிவிடும். shen nong மலையில் 16000க்கும் அதிகமான வெண்ணிற தேவதாருகள் வளர்கின்றன.
|