• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 10:10:16    
சீற்றத்தை துணிவுடன் எதிர்நோக்கியுள்ள சீன மக்கள் 2

cri
கலை..........இதற்கிடையில் லீ ஜின் பற்றிய தகவல் எவருக்கும் தெரிய வில்லை. அவர் பணிபுரிந்த ஹிந்தி மொழி பிரிவுப் பணியாளர்கள் லீ ஜின் பற்றி மிகவும் கவலைபட்டனர்.

தமிழன்பன்.......அவர்களில் அவருடைய பல்கலைக்கழக வகுப்பு சக மாணவி சோ சியௌ தான் அப்போது பெற்ற உணர்வை பற்றி கூறினார்.

கலை..........நாங்கள் 4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களாக பழகினோம். நிலநடுக்கம் நிகழ்ந்த இடத்தில் லீ ஜின் இருந்த தகவலை அறிந்த பின் எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. ஆனால் தேவன் லீ ஜின்கை காப்பாற்ற வேண்டும் என்று நான் இறைவேண்டல் செய்தேன்.

தமிழன்பன்.......துவக்கத்தில் எல்லோரும் லீ ஜின் பற்றிய தகவல் கிடைக்கும் என்று அமைதியாக காத்திருந்தனர். ஆனால் 4 நாட்கள் கழிந்து விட்டதால் மக்கள் பதட்டம் கொண்டு கவலைபட தொடங்கினர். ஆசியத் துறையின் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பாஃன் சிங் அம்மையார் இணையத்தின் மூலம் லீ ஜின் பற்றிய தகவல் வெளியிட்டார். இது பற்றி பாஃசிங் கூறியதாவது

கலை..........நான் தெரிந்த தகவலை இணையத்தில் வெளியிட்டேன். அத்துடன் லீ ஜின்னின் செல்லிட பேசி எண் அவருடைய அலுவலகத்தின் தொலை பேசி எண் எல்லவாவற்றையும் இணையத்தில் வெளியிட்டேன். அவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன்.

தமிழன்பன்.......7 நாட்கள் கழிந்த பின் லீ ஜின் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் என்ற செய்தி எங்கள் வானொலிக்கு கிடைத்ததும் அனைவரும் மகிழ்ச்சியை நிறைந்தனர். கவலை தணிவடைந்தது. அனைவரும் ஹிந்தி மொழி பிரிவு பணியாளர்களுக்கு ஊக்கமூட்டி தங்கள் மகிழ்வினை தெரிவித்தனர்.

கலை..........லீ ஜின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்களில் எதுவுமே செய்யாமல் வாளா இருக்க வில்லை. அது பற்றி லீ ஜின் கூறியதாவது.

தமிழன்பன்.......நான் உள்ளூர் மக்களுடனும் கடைக்காரர்களுடனும் இணைந்து தண்ணீர் சூடாக்கினேன். தற்காலிக மரக் கூடாரம் கட்டியமைத்தேன். பேரிடர் நீக்கப் பணியில் ஈடுப்பட்டுள்ள மக்கள் மற்றும் விடுதலை படைவீரர்களுக்கு தண்ணீர் வழங்கினேன். படைவீரர்களுடன் நிலநடுக்க நிலைமையை கண்காணித்தேன்.

கலை..........படைவீரர்களின் உதவியுடன் மோ மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து மீட்கப்பட்டது. நில நடுக்கம் நிகழ்ந்த 10 வது நாள் நாங்கள் எங்களது காரில் பத்துக்கு மேலான மணி நேர பயணத்திற்கு பின் சுங்கின் நகர் திரும்பினோம் என்றார் லீ ஜின்.

தமிழன்பன்.......நிலநடுக்கம் ஏற்பட்ட போது லீ ஜின் துணிவுடன் உள்ளூர் மக்களுடன் இணைந்து இன்னல்களை சமாளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்.

கலை..........அவர் பிற உற்றார் உறவினர்களின் தொடர்பின்றி தனியாளாக விடப்பட்டாலும் சொந்த ஆபத்தை பொருட்படுத்தாமல் மற்றவர்களிடம் அன்புக் காட்டி கூட்டாக உணவுப் பொருட்களை பகிர்ந்து கொண்டார். இளைஞரான அவர் வாழ்க்கையில் அற்புதமான சோதனை ஒன்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆகவே அவருடைய வாழ்க்கையில் நிலநடுக்கம் போன்ற இன்னல்களை சமாளிக்கும் நம்பிக்கை லீ ஜின்கிற்கு இனிமேல் அதிகமாக இருக்கும்.

தமிழன்பன்.......ஆமாம். மௌ மாவட்டத்தில் இருந்த போது லீ ஜின் பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்ட நேரத்தில் மனதை உருகச் செய்யும் நிழற்படங்கள் பல எடுத்தார். அவை நமது வானொலி தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிர்வாக ஆணையத்திலான ஏற்பாட்டில் நடைபெற்ற பேரிடர் நீக்க நிழற்பட கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

கலை..........பேரிடர் நீக்க போராட்ட நாட்களில் சீன மக்கள் மட்டுமல்ல உலகின் அனைத்து மக்களும் அதிக கவனம் செலுத்தி உதவிகரங்கள் நீட்டியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் முதலில் உதவிக்கரம் நீட்டி பொருட்களையும் உதவி தொகையையும் சீனாவுக்கு வழங்கின. உலகின் இதர நாடுகளான ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் பொருளாதார உதவி வழங்கின.

தமிழன்பன்......பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கூடாரங்கள் பற்றாக்குறை என்ற தகவல் பரவியவுடன் பல நாடுகள் பல முறை கூடாரங்களை நன்கொடையாக வழங்கின. பிரிட்டன், பாகிஸ்தான் முதலிய நாடுகள் குறைந்தது இரண்டு முறை கூடாரங்களை உதவியாக வழங்கின.

கலை......இதிலே உதவிப் பொருட்களை வழங்குவது மட்டுமல்ல பேரிடரில் சிக்கியுள்ள மக்களின் உயிரை காபாற்றும் வகையில் நிலநடுக்கம் நிகழ்ந்த 3 வது நாளில் ரஷியா ஜப்பான் தென் கொரியா ஆகிய நாடுகள் உயிர் மீட்பு அணியை அனுப்பின.

தமிழன்பன்.......ஆமாம். அந்நாடுகளின் உயிர் மீட்பு அணிகள் நிலநடுக்கம் நிகழ்ந்த 3 வது நாளில் சிச்சுவான் வெச்சுவான் சென்றடைந்தன. இடிபாடுகளிலிருந்து உயிரோடு இருக்கும் மக்களை தேடி கண்டறியும் பணியில் பங்கெடுத்தன.

கலை..........ரஷிய அணி 10 பேரை காபாற்றியது. ஆனால் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கிறார். ஜப்பான் அணி முயற்சித்து ஆழமான இடி பாடுகளிலிருந்து மக்களை காபாற்றியது. ஆனால் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்ற வருத்தத்தை அவர்கள் அனுபவித்தனர்.

தமிழன்பன்.......ஜப்பான் உயிர் மீட்பு அணிக்கு மொழிபெயர்ப்பில் உதவும் வகையில் சீன வானொலி ஜப்பான் மொழிப் பிரிவு பணியாளர் சியாங் பிங் இளைஞர் செய்தியாளராக சிச்சுவான் பேச்சுவான் மாவட்டத்துக்குச் சென்றார்.

கலை..........அங்கே பணிபுரிந்த 15 நாட்கள் அவர் முழுமூச்சுடன் பேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்தார். இது பற்றி அவர் கூறியதாவது.

தமிழன்பன்....... பேரிடர் நீக்கப் பணியில் மக்கள் அனைவரும் காட்டிய உதவி மனப்பான்மையை என்னால் என்றுமே என் நினைவில் ஆழபதிந்துள்ள விடயம். அதனை என்னால் என்றுமே மறக்க முடியாது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் பள்ளி மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியரின் தலைமையில் அடர்ந்த மலையிலிருந்து வேறு இடத்திற்கு வெளியேற வேண்டும். இரவு நேரம் உணவுப் பொருட்கள் இல்லை. தங்கியிருக்க சரியான இடமில்லை. மாணவர்கள் தங்கள் கையால் துணிகளின் முனையை பிடித்துக்கட்டி துணிகளால் கூடாரத்தை உருவாக்கினர். மாணவிகளுக்காக மாறிமாறி விடியற்காலை வரை காவல் பணிபுரிந்துள்ளனர். அப்போது மக்கள் தன் குடும்பம் என்ற எல்லையிலிருந்து விடுபட்டு சமூகக் குடும்பமாக வாழ்ந்து யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் உடனே பலர் உதவிகரம் நீட்ட தயாராக இருந்தனர். அங்கே ஓய்வு நேரம் இல்லை. பகலும் இரவும் பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டோம். குறுகிய நேரத்தில் காபாற்றப்பட வேண்டிய எல்லா மக்களையும் காபாற்ற வேண்டும் என்பதே எங்கள் ஒரேயொரு நோக்கமாக இருந்தது.

கலை..........சியாங் பிங் பேய்ச்சுவான் மாவடத்தில் தங்கியிருந்த 15 நாட்களில் அவர் நாள்தோறும் பேரிடர் நீக்க செய்திகளை ஜப்பான் மொழிப் பிரிவு இணையத்திற்கு அறிவித்தார். அந்த இணையப் பக்கங்களை பயன்படுத்துவோர் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தார்.

தமிழன்பன்.......ஆமாம். அவர்கள் வழங்கிய நேரடி தகவல்களின் காரணமாக ஜப்பான் நேயர்களும் இணையம் பயன்படுத்துவோரும் சீனாவில் பேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்துள்ள தமது சக நாட்டவர்களின் தியாகம் நிறைந்த பணிகளை அறிந்து கொண்டனர். ஜப்பான் மற்றும் சீன மக்களுக்கு இடையிலான நட்பு இந்த நிலநடுக்க பேரிடர் நீக்கப் பணியிலான ஜப்பானிய உயிர் மீட்பு அணியின் முயற்சியுடன் வலுபடுத்தப்பட்டுள்ளது.