இன்று முதல் செப்டெம்பர் 20ஆம் நாள் வரை, நாள்தோறும் காலை ஏழு மணி முதல், இரவு ஏழு மணி வரை (ஆக்ஸ்டு திங்கள் தொடக்கம் நாள் முதல் 24ஆம் நாள் வரை, செப்டம்பர் திங்கள் மூன்றாம் நாள் முதல், 17ஆம் நாள் வரை, இந்த நேரவரம்பு இரவு ஒன்பது மணிக்கு நீட்டிக்கப்படும்), பொது மக்கள், இலவசமாகத் தொலை பேசி மூலம், போட்டி அரங்குகள், மற்றும் சுற்றுலா காட்சித் தலங்களின் வானிலையையும், போக்குவரத்துக்கான வானிலை முன் அறிவிப்புகளையும், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை இணைந்து நடத்தும் நகரங்களின் வானிலையையும் அறிய முடியும் என்று பெய்ஜிங் சிறப்பு வானிலை நிலையத்தின் தலைவர் Ding Deping அறிமுகப்படுத்தினார். தொலைபேசி தவிர, ஒலிபரப்பு, செய்தியேடுகள், தொலைக் காட்சி முதலிய செய்தி ஊடகங்கள், குறுந்தகவல், வானிலை இணையத் தளம், வெளியே உள்ள கண்காட்சித் திரைகள் ஆகியவை மூலம், ஒலிம்பிக்கின் போதான வானிலையை அறிய முடியும்.
|