• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:31:26    
தமிழன்பன்

cri
பொன்விழா ஆண்டை நோக்கிய பயணத்தில் வீறுநடை போடும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தனது 45 வது ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். செம்மொழியாம் நம் தாய்மொழி தமிழில் சீனாவையும், உலகையும் தமிழகம், இலங்கை மற்றும் உலகின் கடைகோடி இடங்களிலும் பரவி வாழும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் சீன வானொலியை உங்களில் ஒருவனாய் பாராட்டி மகிழ்கிறேன்.

பூட்டுக்கு திண்டுக்கல்

மாம்பழத்திற்கு சேலம்

தட்டுக்கு தஞ்சாவூர்

சீனாவை அறிவதற்கு

சீனத் தமிழ் வானொலி

என்ற உன்னத நிலை உருவாகிவிட்ட காலம். இது சீனத் தமிழ் வானொலியில் 45 ஆண்டுகள் பங்களிப்பு செய்த தலைவர்கள், துணைத் தலைவர்கள், பணியாளர்கள், நேயர்கள் அனைவரின் அயராத, இடைவிடாத முயற்சிகளாலும், பல்வேறு தியாக செயல்பாடுகளாலும் உருவான அற்புதம். மகிழ்ச்சியான இவ்வேளையில் அவர்கள் அனைவரது பங்களிப்பும் என் நெஞ்சில் ஆழமாய் பதிகிறது.

இந்தியாவின் தென்கோடியான குமரியில் பிறந்து, இளங்கலை பட்டம் பெற்றவுடன், ஊடகத்துறையில் என்னை இணைத்து கொண்ட நான், முதுகலை பட்டங்களுக்கு பிறகு, வானொலி நிகழ்ச்சிகள் அறிவிப்பு மற்றும் தயாரிப்பு, மேடை நாடகத் தயாரிப்பு மற்றும் இயக்கம், விளம்பரங்கள் என பல்வேறு அனுபவங்களை பெற்றேன். தற்போது, 45 ஆண்டுகால வரலாறு கொண்ட சீனத் தமிழ் வானொலியில் பணிசெய்து, பங்காற்றி கொண்டிருப்பதை நினைத்து பெருமையடைகின்றேன்.

சீன வானொலி தமிழ்ப்பிரிவில் இணைந்தபோது தான், இது சர்வதேச உறவுகளால் பின்னி பிணைக்கப்பட்ட மகத்தான ஒரு குடும்பம் என்று தெரியவந்தது. சீனத்து நண்பர்கள், செந்தமிழில் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் அறிவிக்கும் வானொலி பணியாளர்கள், நிகழ்ச்சிகளை நாள்தோறும் கேட்டு கடிதங்கள் எழுதி சாதனை படைத்துக்கொண்டிருக்கும் நேயர் நண்பர்கள், நேயர் மன்றங்கள், உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒருமனதோடு சங்கமிக்க பாலமாக இருப்பது தான் சீனத் தமிழ் வானொலி. இது உறவுகளின் சங்கமம். நட்புறவில் வளரும் இக்குடும்பத்தில் இணைந்து, உங்களது அரிய பங்களிப்பை சீனத் வானொலிக்கு அளிப்பது, தமிழ் மொழி வளர்ச்சியில் சீனத் வானொலி தமிழ்ப்பிரிவு ஆற்றும் பணியை மேம்படுத்தி செழுமையாக்கும்.

சீனத் தமிழ் வானொலி குடும்பத்திலிருந்து,

தமிழன்பன் (மைக்கிள்)