• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:36:42    
சீதா

cri
வணக்கம் நண்பர்களே. என் பெயர் சீதா. 2007ம் ஆண்டு, நான் சீன வானொலி நிலையத்தில் தமிழ் ஒலிபரப்பு பணியில் சேர்ந்தேன். தற்போது, இணையத்தள பணியில் ஈடுபடுவதோடு, நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்குப், பொறுப்பானராக இருந்து அதனை வழங்குகிறேன். சீன வானொலியில் பணி புரிவதும், நேயர்களுக்குத் தொண்டு செய்வதும், என்னைப் பொறுத்தவரை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

அன்றாட சமூகத்தில் சேர்ந்துள்ள நான், கடந்த வாழ்வை நினைவில் வைத்திருக்கிறேன். எனது சொந்த ஊர், தென் கிழக்கு சீனாவின் ஜியான்சு மாநிலத்தில் இருக்கிறது. மேனிலை பள்ளியில் தேர்ச்சி பெற்ற பின், 2003ம் ஆண்டு வீட்டை விட்டு, முதன்முறையாக பெய்ஜிங்கு வந்தேன். சீன செய்தி தொடர்புப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தமிழ்மொழியைக் கற்றுகொள்ளத் தொடங்கினேன். அதைக் கற்றுகொள்வது, தொடக்கத்தில் கடினமாக இருந்தது. எனவே சொற்களையும் இலக்கணத்தையும் மனப்பாடம் செய்தேன். ஆசிரியர்களின் உதவியுடன், நான் தமிழ்மொழியைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். அப்போது, என்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ள வில்லை என்பதை நினைத்து இப்போது வருத்தமடைகிறேன். அறிவுக்கு எல்லை இல்லை தான்.

படித்து தேர்ந்த திறமைகளை நடைமுறையில் முழுவதுமாக பயன்படுத்த நான் முயற்சி மேற்கொள்கிறேன்.

பணி நேரத்தை முழுவதுமாக பயன்படுத்தி, பணி புரிய நான் என்னால் இயன்றது அனைத்தையும் செய்வேன் என உறுதி கூறுகிறேன். வானொலியில் பணிபுரியும் வாய்ப்பை நான் பேணிமதிப்பேன்.

கடந்த காலம், நடந்து முடிந்தது. எதிர்காலம் என்ன நடக்கும் என்பது தெரியாதது. நிகழ்காலமே எனது கையில் உள்ளது. இக்கால வாய்ப்பை இறுகப்பற்றி கொண்டு வளர்வேன்.