• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:39:22    
திலகவதி

cri
அன்புள்ள நேயர்களே!வணக்கம்!என் பெயர் திலகவதி. 2003ஆம் ஆண்டு, நான் பிறந்தகமான Henan மாநிலத்திலிருந்து தலைநகர் பெய்ஜிங்குக்கு வந்தேன். சீன செய்தித் தொடர்புப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தமிழ் மொழியைக் கற்றுப இதுவரை 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டின் அக்டோபர் திங்களில், சீன வானொலியின் தமிழ் பிரிவில் சேர்ந்து, தமிழ் இணையதளத்தின் பணியாளராக வேலை செய்யத் தொடங்கினேன்.

சீன வானொலியில் சேர்ந்ததும், நேயர்கள் அனுப்பிய கடிதங்களின் எண்ணிக்கை எனக்குத் திகைப்பூட்டியது. நேயர்களின் உற்சாகம் எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. தற்போது, சனிக்கிழமையில் இடம்பெறும் இசை நிகழ்ச்சியில் சிறந்த சீனப் பாடல்களை வழங்கவும், இணையத்தள வேலைகளை நன்றாக செய்யவும் பாடுபடுகின்றேன். நேயர்களின் உற்சாகம் எனக்கு ஊக்கம் ஊட்டுகின்றது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது இணையதளத்தில் உங்களுக்கு போட்டிகளின் நிலைமை பற்றி காலதாமதமின்றி உடனுக்குடன் அறிவிக்கவுள்ளது குறித்து நான் பெருமையடைகிறேன். அந்த நாளைப் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்.

தமிழ்ப் பிரிவு இன்பமான ஒரு குடும்பம் ஆகும். இது நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இக்குடும்பத்தின் உறுப்பினராக இருந்து, சீன மற்றும் தமிழ் மக்களிடையிலான நட்புறவை வலுப்படுத்துவதில், எனக்கு பெருமை.