• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:43:58    
சிவகாமி

cri
வணக்கம். என் பெயர் சிவகாமி. 1983ம் ஆண்டு liao ning மாநிலத்தின் dan dong நகரில் பிறந்தேன். 5வது வயதான போது, பியானோ இசைக்கருவி வாசிக்கத் துவங்கினேன். இது வரை, இரண்டு முறை பியானோ இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். அவற்றில் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்றேன். எனது அயரா முயற்சிகள் வெற்றி பெற்றதை நினைத்து மிகவும் மகிழ்ந்தேன். அன்றாடம் பியானோ இசைக்கருவி வாசிக்கின்றேன். குறிப்பாக, கவலையான நேரங்களில் பியானோ வாசித்தால் மகிழ்ச்சியடைகிறேன். இது, எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்காகும். தவிர, தபால் தலை சேகரிப்பு, ஆடல் பாடல் ஆகியவை எனது பொழுதுபோக்குகளில் சில.

2003 செப்டம்பர் முதல், 2007ம் ஆண்டு ஜூலை திங்கள் வரை, சீன செய்தித்தொடர்பு பல்கலைக்கழகத்தில் நான் தமிழ் மொழிக்கற்று கொண்டு இளங்கலைப் பட்டம் பெற்றேன். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல், சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணி புரிய துவங்கியுள்ளேன். தமிழ் மொழியை நான் மிகவும் நேசிக்கின்றேன். நாள்தோறும் செய்திகளை மன நிறைவுடன் மொழிபெயர்கின்றேன். இந்திய மற்றும் இலங்கை நேயர்களாகிய நீங்கள் அனைவரும் எனது குரலை கேட்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

2008ம் ஆண்டில், தமிழ் மொழிபெயர்ப்பு பணியில் மேலும் அதிகமாகப் பாடுபட முடிவுசெய்துள்ளேன். எனது சளையாத முயற்சிகள் மூலம், மொழி பெயர்ப்பில் அதிக முன்னேற்றங்களைப் பெற முடியும் என்று நம்புகின்றேன். நான், சீன வானொலி நிலையத்தின் வளர்ச்சிக்குப் பங்கு ஆற்றுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

கடைசியாக, இவ்வாண்டு, தமிழ் ஒலிபரப்பின் 45ஆம் ஆண்டு நினைவாகும். இந்நேரத்தில் வரும் நாட்களில், சீன வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளைக் கேட்க மேலதிக நேயர்கள் விரும்புவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அன்றியும், மேலதிக இந்திய மற்றும் இலங்கை நேயர்கள், நமது நிகழ்ச்சிகளைக் கேட்டு பயனடைவார்கள். அந்த அளவுக்கு நமது நிகழ்ச்சிகள், மென்மேலும் சிறப்பாக இருக்கும். சீன-இந்திய மற்றும் இலங்கை மக்கள் அனைவரும், எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகின்றேன்.