• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:46:17    
சரஸ்வதி

cri
வணக்கம் நேயர்கள். என் பெயர் சரஸ்வதி. இந்த வாய்ப்பு மூலம் உங்களுக்கு எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நான் zhejiang மாநிலத்திலிருந்து 2003ம் ஆண்டு, சீன செய்தி தொடர்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில பெய்ஜிங் வந்தேன். 4 ஆண்டுகள் தமிழ் மொழிய கற்ற பின், இளங்கலை பட்டம் பெற்றேன். தேர்வு மூலம் சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி புரிய துவங்கினேன். தற்போது, நான் மாணவர் என்ற நிலையிலிருந்து தமிழ் பிரிவின் ஒரு பணியாளராக மாறியுள்ளது எனக்கு பெருமையாகும்.

ஆசிரியர்கள், மாணவர்களான எங்கள் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் கொண்டிருப்பது எனக்கு புரிகிறது. எனவே, பணிகளின் தேவைகளுக்கு ஏற்றார் போல் நான் சுறுசுறுப்பாக அவற்றை கற்று வருகிறேன். ஆசிரியர்களிடமிலிருது மிகுதியான தமிழ் மொழியின் அடிப்படை அறிவை கற்றுக்கொள்வது மட்டுமல்ல, அதன் மொழிபெயர்ப்பு, உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய திறமைகளில் கற்றுத்தேற விரும்புகிறேன். பண்பாடு, மக்கள் சீனம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நான் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள் அவ்வப்போது நேயர் கடிதங்களில் காணப்படுகின்றன. அவர்களின் முன்மொழிவுகள் அல்லது கருத்துக்கள் இந்நிகழ்ச்சிகளின் தரம் மேம்படுத்தப்படுவதற்கு நன்மை பயக்கின்றன. இது குறித்து கருத்துக்கள் அனுப்பும் நேயர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்ற தெய்வபுலவர் திருவள்ளுவரின் கூற்று படி எனது வளரச்சியில் பங்காற்றும் உங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன்.

அரிய வாய்ப்பாக கடந்த ஆண்டின் இறுதி முதல், இவ்வாண்டின் துவக்கம் வரை, பாண்டா ஊரான Sichuan மாநிலத்தின் பேட்டியானராக ஒரு திங்கள்காலம் நான் நியமிக்கப்பட்டேன். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாட்டுக்கான செய்தி ஊடகங்கள் அளித்த கூட்டு பேட்டியில் கலந்துகொண்டேன். அந்தப் பேட்டி நடவடிக்கை மூலம், செய்தி கட்டுரையை எழுதுவது, கட்டுரைக்குப் பொருத்தமான ஒலி திரட்டுவது போன்றவற்றை திறமையோடு கையாள்வதை நான் புரிந்துகொண்டேன். Sichuan மாநிலத்திலுள்ள மிகுந்த பயன் வாய்ந்த பேட்டி பயணம், என் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

அப்பேட்டி பயணம் முடிந்த பின், முதல் முறையாக சீனாவில் வசந்த விழாவைக் கொண்டாடி இருந்த வெளிநாட்டு நண்பர் தமிழன்பன் என்ற கட்டுரை ஒன்றை நான் சீன மொழியிலே எழுதினேன். அக்கட்டுரை, சீன வானொலியின் நிகழ்ச்சியாக வெளியிடப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ் மொழியை ஆர்வத்துடன் படித்து 5 ஆண்டுகளாகிவிட்டது. இருப்பினும், தமிழ் மொழி பேசப்படுகின்ற பகுதிகளுக்கு நான் இது வரை பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பு கிடைத்தால், எதிர்காலத்தில், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று, தமிழ் மொழியை ஆழமாகக் கற்க விரும்புகின்றேன். சீனாவில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காவும், சீனா-இந்தியா, சீன-இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவு, பண்பாட்டுப் பரிமாற்றம், ஒத்துழைப்பு, ஆகியவற்றிக்கு என்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வேன். வணக்கம். நன்றி!