• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:48:07    
ஜெயா

cri
வணக்கம் நண்பர்களே. என் பெயர் ஜெயா. இப்பொழுது, நான், சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவில் வேலை செய்கிறேன். இதற்கு முன், நான் சீன செய்தித் தொடர்புப் பல்கலைக்கழகத்தில், 2003 முதல் 2007ம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகாலத்தில், தமிழ் மொழியைப் படித்தேன். தமிழ் எழுத்துக்கள், உச்சரிப்பு, இலக்கணம் உள்ளிட்ட தமிழ் மொழி அறிவை, அங்கு பெற்றேன். 2007ம் ஆண்டு ஜூன் திங்கள், பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பின், ஆகஸ்ட் திங்கள் முதல் சீன வானொலி நிலையத்தில் பணி புரியத் துவங்கினேன். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, புதன் கிழமை இடம் பெறும் சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் நீங்கள் எனது நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

நான் வடக்கிழக்குச் சீனாவிலுள்ள லியௌ நிங் மாநிலத்தில் பிறந்தேன். அங்குள்ள நான்கு பருவகாலங்களும் பெருமளவில் வேறுபடுகின்றன. வசந்தகாலத்தில், நான் பட்டம் பறக்க விடவே அதிகம் விரும்புகிறேன். கோடைகாலத்தில், நீச்சலடிப்பது பிடிக்கும். இலையுதிர்காலத்தில், மலை ஏறுவதையும், குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாடவும் விரும்புகிறேன். இதர ஓய்வு நேரங்களில், சீட்டு விளையாடுவதை பொழுது போக்காக மிகவும் விரும்புகிறேன். சில நல்ல விளையாட்டுகளும், கதைகளும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், எனக்குக் கடிதம் மூலம், அறியச் செய்யுங்கள்.

கடைசியாக, உங்கள் நீண்டகால அக்கறை மற்றும் ஆதரவுக்கு, மனமார நன்றி தெரிவிக்கிறேன். தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி!