• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 10:45:52    
நீல நிற பூவேலைப்பாட்டு துணிப் பொருட்கள் அருங்காட்சியகம்

cri

சீனாவின் தென்பகுதியிலுள்ள வூ சி நகரில், நீல நிற பூவேலைப்பாட்டு துணிப் பொருட்களின் அரசுசார அருங்காட்சியகம் உள்ளது. இதில், ஏராளமான நாட்டுப்புற நீல நிற பூவேலைப்பாடுகள் நிறைந்த துணிப் பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
லு ரை சிங் என்பவர் தான், வூ சி நகரில் செய்யப்பட்ட நாட்டுப்புற இந்தப் பூவேலைப்பாட்டு துணிப் பொருட்களைத் திரட்டியவர் ஆவார். 2004ம் ஆண்டில், அவர் சுமார் 5 இலட்சம் யுவானை முதலீடு செய்து, இந்த அருங்காட்சியகத்தை கட்டியமைந்துள்ளார். வூ சியில், சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முதலாவது

தனியார் அருங்காட்சியகம், இதுவாகும். கடந்த சில ஆண்டுகளில் அவர் திரட்டியுள்ள ஆயிரத்துக்கு கூடுதலான நீல நிற பூவேலைப்பாட்டு துணிப் பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டன. பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட இந்தத் துணிப்பொருட்கள், பல்வேறு இனங்களின் வேறுபட்ட காலங்களைச் சேர்ந்த, வேறுபட்ட பாணிகளால் செய்யப்பட்டவையாகும். லு ரை சிங் அறிமுகப்படுத்தியதாவது:
சீனாவில் நீல நிற பூவேலைப்பாட்டு துணிப் பொருட்களின் தொழில் நுட்பத்தின் துவக்கம், வளர்ச்சி, தற்போதைய நிலைமை ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில், முக்கியமாக விளக்கிக்கூறப்படுகின்றன. என்பது

அல்லது தொன்னூறு வயதான மூதாட்டிகள் பயன்படுத்துகின்ற கைவினை நெசவு துணிகள், தலையில் போடப்படும் அலங்கார துணி, ஆடைகள் முதலியவை இதில் இடம்பெறுகின்றன. தவிர, பழைய நெசவு வசதிகளையும் காணலாம் என்றார் அவர்.
இவ்வளவு பெரிய அளவில் பணம் முதலீடு செய்து, அந்தத் தனியார் அருங்காட்சியக்ததை நிறுவுவது பற்றிய தமது எண்களை லு ரை சிங் கூறினார்.
வூ சி, பெரிய பண்பாட்டு நகரமாக மாற பாடுபடுகிறது. அதற்காக, நாட்டுப்புறப் பண்பாட்டைக் காப்பாற்றி வளர்ப்பது, மிக முக்கியப்பணியாகும். பொது நகரவாசியாக, நான், இதை நனவாக்கி, சமூகத்துக்கு பங்காற்ற விரும்புகின்றேன் என்றார் அவர்.
கடந்த நூற்றாண்டின் 70வது ஆண்டுகளில், அவர் வூ சியின் பட்டு ஆடை ஆலையில் வேலை செய்த போது, பெரும்பாலான பட்டுத் துணி மூலப்பொருட்களைப் பார்த்துள்ளார். இக்காலத்தில், அத்தொழில் துறையில் செல்வாக்கு மிகுந்தவர் ஒருவரை அவர் அறிந்துகொண்டார். அவர் கூறியதாவது:

1974ம் ஆண்டு, சுன் யீன் சொன் என்பரை அறிந்து கொண்டேன். அவர் வூ சி பட்டு துணியில், நிற பூ வேலைப்பாட்டு ஆலையின் வடிவமைப்பாளராவார். அவருடைய வீட்டில், சீனாவின் நீல நிற பூவேலைப்பாடுகள் போடப்பட்ட துணி பொருட்கள் பற்றிய நூல் ஒன்று உள்ளது. இந்த அழகான பண்டைகால பூ வேலைப்பாட்டு துணிப் பொருட்கள், என் மனதில் ஆழப்பதிந்துள்ளன என்றார் அவர்.
லு ரை சிங், சீனாவின் நீல நிற பூவேலைப்பாட்டு துணி நுட்பத்தை, படிப்படியாக புரிந்துகொண்டு, ஆய்வு செய்து வருகின்றார்.
1985ம் ஆண்டில், 70 வயதான ஜப்பானிய மூதாட்டி ஒருவர், ஷாங்காய் மாநகரில் சீனாவில் முதல் முறையாக, நீல நிற பூவேலைப்பாட்டு துணி பொருட்களின் கண்காட்சி அறையை நிறுவினார். நீல நிற பூவேலைப்பாட்டு துணிப் பொருட்களின் தொழில் நுட்பம், சீனாவின் பாரம்பரிய பண்பாடு ஆகும். ஜப்பானிய மூதாட்டி, சீனாவில் கண்காட்சி அறையை நிறுவியதைக் கேட்டறிந்த லு ரை சிங், இந்தப் பண்பாட்டைக் காப்பாற்ற விரும்பினார்.

அது முதல், அவர் நீல நிற பூவேலைப்பாட்டு துணிகளையும் அதனாலான பொருட்களையும் திரட்டத் தொடங்கினார். நீல நிற பூவேலைப்பாட்டு துணிப் பொருட்களைக் கேட்டறிந்து, உள்ளூர் மக்களுடன் இணைந்து பேசி, அவைகளைப் பதிவு செய்தார். ஒருமுறை, இத்தகைய பண்டைகால பூவேலைப்பாட்டு துணியை வாங்கும் பொருட்டு, அவர் 3000 யுவான் செலவு செய்துள்ளார் என்று அவருடைய மனைவி நினைவு கூர்ந்தார்.
நீல நிற பூவேலைப்பாட்டு துணிப் பொருட்களைத் திரட்டும் கட்டத்தில், அதிக பணம் இருந்தால், அதிக பொருட்களை சேகரிக்க முடியும் என்று, லு ரை சிங் தெரிவித்தார்.