இலங்கை விளையாட்டு வீரர்கள்
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 6 வகை விளையாட்டுகளில் கலந்துகொள்ள, 8 விளையாட்டு வீரர்களை இலங்கை அனுப்பும் என்று இலங்கை ஒலிம்பிக் குழு கூறியது. அவை, ஓட்டப் பந்தயம், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல், அம்பெறிதல், நீச்சல், பூப் பந்து ஆகியவை என்று தெரிகிறது. சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கத்தை பெற்ற, சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனை Susanthika Jayasinghe, இலங்கை ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் தலைவராக இருப்பார். ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், அவர் கொடி ஏந்தி நடப்பார். இலங்கை ஒலிம்பிக் பிரதிநிதிக் குழு, ஆகஸ்ட் 5ம் நாள், பெய்ஜிங்கிற்கு வந்து சேரத் திட்டமிட்டுள்ளது.
|
|