• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-25 12:19:17    
சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு நிறுவப்பட்டது

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, இன்று பெய்ஜிங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. சீன அரசவை உறுப்பினர் Liu Yandong அம்மையார் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

 

சீன ஒலிம்பிக் விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, 1099 பேரை உள்ளடக்கியது. அவர்களில், 639 பேர் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆவர். அவர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 28 பெரிய போட்டிக்கள் அனைத்திலும் கலந்து கொள்வர். அவர்களில், நீர் குதிப்புப் போட்டியிலான Guo Jingjing, துப்பாக்கிச்சுடுதலிலான Tan Zongliang மற்றும் ஆடவர் கூடைப்பந்திலான Li Nan ஆகியோர், 4வது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தவிர, 469 விளையாட்டு வீரர்கள், முதல் முறையாக இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

சீனாவின் விளையாட்டுத் துறை, பல ஆண்டுகளாக, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆயத்தம் செய்து வருகிறது. அவர்கள் போட்டியில் வெற்றி பெற முழு மூச்சுடன் பாடுபடுவர் என்று சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீனத் தேசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவருமான Liu Peng தெரிவித்தார்.