48 ஆண்டுகளுக்கு முன், இத்தாலியின் தலைநகரான ரோமில், 17வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. இப்போட்டியில், அலி உள்ளிட்ட பல புகழ் பெற்ற பிரமுகர்கள் தோன்றியுள்ளனர். உபசரிக்கும் நாடான இத்தாலியை பொறுத்த வரை, அவர்களில், ஒரு பிரமுகர் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவராவார். இத்தாலியின் புகழ் பெற்ற தடகள வீரரும் ரோம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தின் சாம்பியனுமான லிவியோ பெருட்டி தான் அவர்.
1960ம் ஆண்டு, ஆடவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைக்கப்பட்டது. ரோம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு முன்பு, 3 அமெரிக்க வீரர்கள், இந்த உலக சாதனையை முறியடித்துள்ளனர். ரோம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இறுதியில் இத்தாலியைச் சேர்ந்த லிவியோ பெருட்டி, தங்கப்பதக்கம் பெற்றார். அறிவிப்பாளர் கூறியதாவது
லிவியோ பெருட்டி அதிகம் வெளிப்படையாக பழகாதவர். இப்போட்டியில் வெற்றி பெற முடியும் என்று அவர் எப்போதும் உறுதியாக நம்பினார். 20.08 வினாடிகள் என்ற சாதனையில், கால் இறுதி போட்டியின் வெற்றியை அவர் பெற்றார். அவர், மேலும் சிறந்த சாதனையை பெற முடியும். ஆனால், அடுத்த நாள், அவர், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்காக தன்னால் இயன்றதனைத்தையும் செய்யவில்லை. அரை இறுதிப்போட்டியில், அமெரிக்க வீரர்களான நோல்டன், ஜான்சன் ஆகியோர், லிவியோ பெருட்டியின் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர். ஓட்டப்பந்தயத்தின் பாதையில் லிவியோ பெருட்டி சீராக ஓடினார். 20.05 வினாடி என்ற சாதனையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புதிய உலகச் சாதனையை பெருட்டி படைத்தார்.
ஆயத்த போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் 20.05 வினாடி என்ற சாதனையில், அவர், உலகச் சாதனையை படைத்தார். அதே வேளையில், தங்கப்பதக்கமும் பெற்றார். அவர், இந்த பந்தயத்தின் தங்கப்பதக்கம் பெற்ற முதல் இத்தாலியராகவும், ஐரோப்பியராகவும் மாறினார். அதே வேளையில், இந்த பிரிவு பந்தயத்தின் உலக நிலையை இத்தாலி மக்கள், நீண்டகாலமாக நிலைநிறுத்துவதற்கு அவர் உறுதியான அடிப்படையை உருவாக்கினார்.
இதற்கு பின், லிவியோ பெருட்டி, இத்தாலியின் தலைசிறந்த வீரராக மாறினார். எனவே, அவர், இத்தாலிய மக்களின் அன்பையும் மதிப்பையும் ஈட்டியுள்ளார். லிவியோ பெருட்டியின் சிறந்த செயல்பாடு பற்றி, அப்போது, இத்தாலிய தடகள விளையாட்டு பயிற்சியாளராக இருந்த wani gao li ya கூறியதாவது
இப்போட்டியில் மக்களின் அன்பையும் மதிப்பையும் லிவியோ பெருட்டி பெற்றார். அதே வேளையில், இத்தாலியில், இந்த போட்டிக்கான மக்களின் மாபெரும் உற்சாகமும் எழுப்பப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இத்தாலி வீரர் பியெத்ரோ மெனியா தடகளப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றார். ஆனால், அதற்கு ஓராண்டுக்கு முன், மெக்சிகோவில், அவர் புதிய உலக சாதனையைப் படைத்தார்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டு கடந்து விட்டது. அப்போது, வேதியியல் துறையின் பல்கலைக்கழக மாணவரான பெருட்டி, இப்போது முதியவராக மாறியுள்ளார். அப்போதைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நினைவு கூறும் போது, அவர் கூறியதாவது
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டது அருமையான தருணமாகும். பல்வேறு நாடுகளின் வீரர்களுடன் நான் தொடர்பு கொண்டு, பல்வேறு நாகரிகங்களையும், பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் அறிந்து கொண்டு, ஒலிம்பிக் எழுச்சியை உண்மையாக அறிந்து கொள்ள முடியும். அனைவருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சமமானது. இனவெறி பாகுபாடு இல்லை. வேறு எந்த பாகுபாடுகளும் இல்லை. வெளித்தோற்றத்தையும் பொருளாதாரக் காரணியையும் பொருட்படுத்தாமல், இப்போட்டியில் அனைவரும் சமமாக பங்கு கொள்ளலாம்.
நடைபெறவுள்ள பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு, ஒலிம்பிக் வளர்ச்சி வரலாற்று சான்றாக விளங்கும் மூத்த வீரரான பெருட்டி, மனமுவந்த வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவர் கூறியதாவது
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பிரமாண்டமான விழாவாக அமைய வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன். ஒவ்வொரு வீரரையும் பொறுத்த வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அருமையான தருணமாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மேலும் சிறந்த சாதனைகளுக்கு, வீரர்கள் தங்களால் இயன்றதனைத்தையும் செய்ய தயார் செய்கின்றனர். பெய்சிங் ஒலி்ம்பிக் விளையாட்டுப் போட்டி, பல்வேறு நாடுகளின் வீரர்களுக்கு இடையிலான நட்புறவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் விழாவாக மாற வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உடன்பிறப்பு உணர்வை வெளிப்படுத்தும் அமைதியான, பிரமாண்டமான விழாவாகும். எனவே, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அமைதியான விழாவாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
|