• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-25 09:24:31    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள மெக்சிகோ தூதரின் நல்வாழ்த்துக்கள் 2

cri
பெய்சிங்கிற்கு வருகின்ற மக்கள் அனைவரும், இந்நகரில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றத்தை உணர்ந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டு, நான் பெய்சிங்கிற்கு வந்தேன். நெடுஞ்சாலை, ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகள், குடியிருப்பு, நகரவாசிகளின் பண்பாட்டு அளவு மற்றும் ஆங்கிலம் பேசும் நிலைமை ஆகிய பல்வேறு துறைகளில் பெய்சிங்கில் ஏற்பட்ட மாற்றத்தை நான் நேரடியாக கண்டுள்ளேன். 7 ஆண்டுகளுக்கு முன், 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை, பெய்சிங் பெற்ற பின்,

பெய்சிங்கில் ஏற்பட்ட மாற்றங்களை ஆச்சிரச்சி செய்தன கண்டு மக்கள் வியப்படைவது உறுதி என்று நான் முழுமையாக நம்புகின்றேன். வெகு குறுகிய காலத்தில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் பல்வேறு துறைகளிலான நிலைமைகளை சீன அரசு மற்றும் மக்கள் நிறைவேற்றியதற்கு நான் உளமார்ந்த வாழ்த்து தெரிவித்திறேன். என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளில், ஒலிம்பிக் திடல்களும் அரங்குகளும் Guajardoவின் மனத்தின் ஆழமாக பதிந்துள்ளன. பெய்சிங்கிலுள்ள அனைத்து வெளிநாட்டவர்களை பொறுத்த வரை, ஒலிம்பிக்

திடல்களும் அரங்குகளும் எமது மனங்களில் ஆழமாக பதிந்துள்ளன. பறவைக்கூடு என்ற தேசிய விளையாட்டரங்கு, நீர் கன சதுரம், ஒலிம்பிக் கிராமம் ஆகியவை நவீனமயமாக்கம் மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளாக உள்ளன என்றார் அவர்.
சீனாவிலுள்ள மெக்சிகோ தூதரான Guajardo சில ஒலிம்பிக் திடல்களையும் அரங்குகளையும் முன்கூட்டியே பார்வையிட்டார், ஆகஸ்டு திங்களில், அவற்றை பொது மக்களுக்கு பார்வையிடலாம். அவரை பொறுத்தவரை இது பெரிய மதிப்பாகும். மேலும், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு மெக்சிகோ வீரர்களின் தயாரிப்புப்

பணிகளை பற்றி அவர் விவரித்தார். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக மெக்சிகோ வீரர்கள் ஆயத்தம் செய்து வருகின்றனர். இந்த விளையாட்டு திருவிழாவின் மீது, அவர்கள் முழு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருக்கின்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மேலதிக நாடுகள் கலந்துகொள்ளும் என்றார் அவர்.
இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் நீர் குதிப்பு, taekwondo மற்றும் குத்துச் சண்டை போட்டியில் மெக்சிகோ வீரர்கள் மகிழ்ச்சியூட்டும் சாதனைகளைப் பெறக் கூடும் என்று Guajardo கூறினார்.