ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, சுமார் 5 இலட்சம் வெளிநாட்டு விருந்தினர்கள் பெய்ஜிங் வந்து தங்குவார்கள். இதற்கான பெய்ஜிங் ஆயத்தப்பணியை செவ்வனே செய்துள்ளது என்று பெய்ஜிங் சுற்றுலா ஆணையத்தின் தலைவர் சாங் ஹுவேய் குவாங் அம்மையார் இன்று கூறினார்.
பெய்ஜிங்கில் தங்குமிட வசதிகளின் மூலவளம் போதுமானது. ஒலிம்பிக் இரசிகர்கள், பெய்ஜிங் நகர காட்சிகளை நன்றாக உணர்ந்துகொள்ள, இவ்வாணையம், 50 தலைச்சிறந்த சுற்றுலா நெறிகளை வகுத்துள்ளது. தவிர, பல மொழிகளிலான சுற்றுலா விளம்பர வெளியீடுகளைத் தயாரித்து, விமான நிலையம், ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இலவசமாக வினியோகித்துள்ளது.
|