சீனாவிலுள்ள உலகின் மரபுச் செல்வம் என்ற மாபெரும் விளக்க திரைப்படத்தை, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் முன், சீனத் தேசிய தொலைக்காட்சி நிலையம் படைத்தது. சீனாவின் ஒளிமயமான இயற்கைப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் உள்ளபடியே எட்டுத்துக்காட்டப்பட்டன என்பது இதுவே முதன்முறையாகும்.

உலகம், சீனாவின் நாகரிகத்தை புரிந்துகொள்கின்ற ஜன்னலாக இது மாறியுள்ளது.
38 தொகுதி கொண்ட இத்தொலைக்காட்சி விளக்க திரைப்படம், 7 ஆண்டுகாலத்தில் தயாரிக்கப்பட்டது. 2008ம் ஆண்டுக்கு முன்பு, ஐ.நாவின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தின் உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட சீன 33 பிரதேசங்களின் இயற்கை மரபு, பண்பாட்டு மற்றும் மனித குலத்தின் பொருள் சாரா மரபுச் செல்வங்கள் ஆகியவை இத்தொலைக்காட்சி விளக்க திரைப்படத்தில் அடங்குகின்றன.

இவ்விளக்க திரைப்படம் மூலம், சீனாவின் அழகான இயற்கைக் காட்சிகள், 5 ஆயிரம் ஆண்டு நீண்டகாலமான சீனாவின் வரலாற்றுப் பண்பாடு, சீனாவின் 56 தேசிய இனங்களின் நடையுடைபாவனைகள், தேசிய இனத்தின் பாடல்கள் முதலியவற்றை மக்கள் இத்தொலைக்காட்சி விளக்க திரைப்படத்தில் அனுபவி கண்டுரசிக்கலாம்.

சீனாவின் பண்டைக்கால அரண்மனை அருங்காட்சியம், உலகின் ஒரே ஒரு மரபுச் செல்வமாகும்.
உலக மரபுச் செல்வத்தின் தனிச்சிறப்புத் தன்மையை விளக்கிக்கூறுவது என்பது இத்திரைப்படத்தின் முக்கிய தலைப்பாகும். ஒவ்வொன்று மரபுச் செல்வம், பல்வகை கதைகள் மூலம் பொது மக்களிடன் எட்டுத்துக்காட்டுவதில் நாங்கள் ஆர்வம் கொள்கின்றோம் என்று இத்திரைப்படத்தின் தலைமை இயக்குநர் guanhui தெரிவித்தார்.

நண்பர்களே, சீனாவின் இயற்கைப் பண்பாட்டு மரபுச் செல்வம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|