• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-28 15:51:06    
ஒலிம்பிக் தீபம் ஏந்தியவர் Zhangshichang இன் அறிமுகம்

cri
சீன வானொலி நிலையம். வணக்கம். நேயர்களே, இன்றைய நிகழ்ச்சியில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஏந்திய சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

விளையாட்டுச் சூழல் மிகுந்த Shenyang நகரின் dongji தொழில் குழுமம், சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தொழில் நிறுவனத்தின் கட்சிக் குழுவின் துணைச் செயலாளரும், தொழிற்சங்கத்தின் தலைவருமான zhangshichang, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம் ஏந்தியவர் ஆவார்.

இத்தொழில் குழுமத்தின் நீண்டகாலமான பணியாளர்களின் விளையாட்டு வரலாறு பற்றி, அவர் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

Shenyang dongji தொழில் குழுமம் நிறுவப்பட்டு 70 ஆண்டுகளாகிவிட்டன. கடந்த 80ம் ஆண்டுகளின் துவக்கத்தின் போது, சீனாவின் 6-10வது தேசிய விளையாட்டுப் போட்டிக்காலத்தில், தேசிய அளவில் பொது மக்களின் விளையாட்டுப் பணிக்கான முன்னேறிய பிரிவாக நம் தொழில் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 90ம் ஆண்டுகளின் துவக்கத்தில், தொழில் நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டிருந்த போதிலும், நீச்சல் குளம், கட்டுக் குலையாமல் உடலை வைப்பதற்கான பயிற்சி பூங்கா மற்றும் விளையாட்டு அரங்குகளில் இத்தொழில் நிறுவனம் மறுசீரமைப்பு பணிகள் செய்தது என்றார் அவர்.

பொது மக்களின் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் துணை புரியும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பொது மக்களின் விளையாட்டுப் பணிகளில் ஈடுபடுவது, பணியாளர்களின் உடல் நலத்துக்கு நல்லது. உடல் நலம் உயர்வால், உழைக்கும் ஆற்றல் அதிகரிக்கும். மறு புறம், பணியாளர்களின் ஆத்மீக தேவையை நிறைவு செய்யும் வகையில், கட்டுக் குலையாமல் உடலை வைக்க அதற்கான உடற்பயிற்சி இடங்கள் மற்றும் வசதிகள் உருவாக்கப்பட்டும். இது, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நலன் தரும் என்றார் அவர்.

Shenyang நகரத்தில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஏந்துபவராக zhangshichang தேர்ந்தெடுக்கப்பட்டார். இது, இத்தொழில் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு பெருமை சேர்கிறது. Zhangshichang கூறியதாவது:

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம் ஏந்துபவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பல பணியாளர்கள் எனக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.

பிறகு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு அவர் அருமையான நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகயளவில் மிக தலைசிறந்த விளையாட்டுப் போட்டியாக மாறும். சீனாவின் உண்மையான மாற்றங்களை வெளிநாட்டு நண்பர்கள் கண்கூட்டாகக் காண்பர். சீன மற்றும் உலக மக்களுக்கிடையிலான உளமார்ந்த நட்புறவை வெளிநாட்டவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நாங்கள் அமைதியை நிலைநாட்டி வருகின்றோம் என்றார் அவர்.