• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-28 15:57:19    
ஒலிம்பிக் தீபம் ஏந்தியவர் Michael cambanis இன் அறிமுகம்

cri
சீனாவிலுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் வெளிநாட்டு தீபம் ஏந்தியவர்களில், சீனாவிலுள்ள கிரேக்க தூதர் Michael cambanis ஒருவராவார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் தீப தொடரோட்ட நடவடிக்கை ஜூன் திங்கள் 2ம் நாள், ஹூபெய் மாநிலத்தின் jingzhou நகரத்தில் நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடங்கிய நாட்டை சேர்ந்த Michael cambanis, சீனாவிலுள்ள தீபத் தொடரோட்ட நடவடிக்கையில் தீபமேந்தி கலந்துகொள்ளும் ஒரே ஒரு தூதர் ஆவார். அவர் கூறியதாவது:

தீபத் தொடரோட்ட நடவடிக்கை என்ற மாபெரும் விழாவில் கலந்துகொள்வது எனக்கு பெருமை என்றார் அவர்.

2004ம் ஆண்டு, கிரேக்க தலைநகர் ஏதன்ஸில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அனுபவங்களை சீனாவுடன் பகிர்ந்துகொள்ள கிரேக்கம் விரும்புகிறது. அவர் கூறியதாவது:

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தும் அனுபவங்கள் குறித்து, பல தொழில் நுட்பத்தில் ஈடுபடும் கிரேக்க பணியாளர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் குழுவின் பணியாளர்களுடன் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

விளையாட்டு மற்றும் தொடர்புடைய போட்டிகளின் ஆயத்தப் பணியில் மட்டுமல்ல, இரு நாடுகளுக்கிடையில் பல்வேறு துறைகளிலான பரிமாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவர் கூறியதாவது:

இவ்வாண்டு, சீன-கிரேக்க பண்பாட்டு ஆண்டு என்ற விழா நடைபெற்றது. இதன் மூலம், சீனா-கிரேக்கம் இரு நாடுகளின் உறவு மேலும் நெருக்கமாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற துறைகளிலான பரிமாற்றங்களை இரு நாடுகளும் வலுப்படுத்தி வநதுள்ளன என்றார் அவர்.

தூதாண்மை அதிகாரியான Michael cambanis, 3 ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்கு வந்து, பெய்ஜிங் மாநகரத்தில் வாழ்கின்றார். இம்மாநகரத்தை அவர் மிகவும் விரும்புகிறார். பறவைக் கூடு, நீர் கன சதுரம் உள்ளி்ட்ட பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளுக்கு அவர் பல முறை சென்றுள்ளார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆயத்த பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர் அதிகமான எதிர்பார்ப்பு கொள்கிறார். அவர் கூறியதாவது:

16 நாட்கள் நடைபெறும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நாங்கள் மிகவும் எதிர்பார்கின்றோம். இந்த விளையாட்டுப் போட்டி, ஒரு மாபெரும் விளையாட்டு விழாவாகும் என்று அவர் கூறினார்.

பெய்ஜிங் மாநகரம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதில் கிரேக்கம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. பெய்ஜிங்கிற்கு நல்வாழ்த்துக்களை அவர் கிரோக்கத்தின் சார்பில் தெரிவித்தார்.