• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-28 09:44:18    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள மெக்சிகோ தூதரின் நல்வாழ்த்துக்கள் 3

cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் முழுமையாக ஆயத்தம் செய்து, மகிழ்ச்சியூட்டும் சாதனைகளைப் பெறுவது உறுதி என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலகில் முக்கிய ஒரு விழா மட்டுமின்றி, பல்வேறு நாடுகள், தனது நாட்டின் பண்பாட்டை எடுத்துக்காட்டி, பரஸ்பர பரிமாற்றத்தையும், கல்வியையும் மேற்கொள்ளும் மேடையுமாகும். சீனா நீண்டகால வரலாற்று

பண்பாட்டு மரபுச் செல்வங்களை கொண்டுள்ளது. கடந்த ஓராண்டில், வாழையடி வாழையாக நிலவி வருகின்ற சீனப் பண்பாட்டை Guajardo நன்கு புரிந்து கொண்டார். உலக மக்களுக்கு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா பெரும் வியப்பை ஏற்படுத்தும் என்று அவர் முழுமையாக நம்புகின்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, 3வது பெய்சிங் சர்வதேச நுண்கலைக் கண்காட்சி நடைபெறும். உலகிற்கு மெக்சிகோவின் கலைஞர்களது தலைசிறந்த படைப்புகள் எடுத்துக்காட்டப்படும். இது குறித்து Guajardo பெரும் எதிர்பார்ப்பு

கொண்டுள்ளார். கடந்த பெய்சிங் சர்வதேச நுண்கலைக் கண்காட்சியில், மெக்சிகோ ஓவியர் வில்யா தலைசிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றார். பெய்சிங்கிற்கு வருமாறு மெக்சிகோ கலைஞர்களுக்கு ஒருங்கிணைப்புக் குழு சிறப்பாக அழைப்பு விடுத்துள்ளதோடு, மெக்சிகோ இதில் சிறப்புக் கண்காட்சியை நடத்தியுள்ளது. அதே வேளை, 14 மெக்சிகோ கலைஞர்கள், பெய்சிங்கிற்கு வருவார்கள். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, நுண்கலைத்

துறையிலான ஒலிம்பிக் என்று பட்டமான அழைக்கப்படும் இந்த முக்கியமான கண்காட்சி மூலம், சீன மற்றும் உலக மக்களுக்கு மெக்சிகோவின் பண்பாட்டை அவர்கள் எடுத்துக்காட்டுவார்கள். நாங்கள் மிக அதிகப் பெருமை அடைகிறோம் என்றார் அவர்.
சீன மொழியில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான நல்வாழ்த்துக்களை Guajardo தெரிவித்தார்.
பெய்சிங் மற்றும் சீனாவுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்றார் அவர்.