ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி
cri
பெய்ஜிங் ஒலிம்பிக், தனிச்சிறப்பும், உயர் தரமும் வாய்ந்த விளையாட்டுப் போட்டியாக இருப்பதற்கு, உத்தரவாதம் அளிக்கும் வகையில், சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று, வட கொரிய 《Rodong Sinmun》என்ற தொழிலாளர்களின் நாளேடு இன்று வெளியிட்ட கட்டுரை கூறியது. தற்போது, பல்வேறு ஆயத்தப் பணிகள், கடைசி கட்டத்தில் நுழைந்துள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்யும் மற்றும் துணை புரியும் நகரங்களின் சுங்கசாவடிகள், ஒலிம்பிகிற்கான பாதுகாப்பு ஆணை முறைமையை அமைத்தன. பெய்ஜிங்கில் அனைத்து ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான அரங்குகளிலும் திடல்களிலும், ஒலிம்பிக் ஊடக கிரமத்திலும், சுரங்க இருப்புப்பாதை நிலையங்களிலும், பாதுகாப்பு சோதனை சாதனங்கள் பொருத்தப்பட்டன. உணவு பாதுகாப்பு கண்காணிப்பு முறைமை அமைக்கப்பட்டது. தொலைத்தொடர்பு உத்தரவாதம் மற்றும் சேவைக்கான ஆயத்தப் பணி, செய்து முடிக்கப்பட்டு விட்டது. இதை தவிர, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாக்களின் பயிற்சி, பறவை கூட்டில் வெற்றிகரமாக நடைபெற்றன. ஒலிம்பிக் ஊடக கிராமம் திறக்கப்பட்டது. நகரின் போக்குவரத்து உத்தரவாதத்திற்கான நடவடிக்கைகளைப் பெய்ஜிங் மேற்கொண்டது என்று இக்கட்டுரை கூறியது.
|
|