• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-29 15:56:25    
சி மா தை பெருஞ்சுவர் (ஆ)

cri

சி மா தை பெருஞ்சுவரின் தனிச்சிறப்புகள்

சி மா தை பெருஞ்சுவர், ஆயிரமாயிர மைல் தூரம் இருக்கின்ற பெருஞ்சுவரின் பல்வேறு தனிச்சிறப்புகளைக் கொள்கிறது. அது, ஒரு பக்க சுவர் மற்றும் இரு பக்க சுவர்களை கொண்டுள்ளது. தற்காப்புக் கோபுரங்கள் பல வடிவமைப்புகளோடு கட்டப்பட்டுள்ளன. இரண்டு மற்றும் மூன்று மாடிகளை கொண்ட தற்காப்புக் கோபுரங்கள் இருக்கின்றன. அதன் சிகரங்களின் பல வடிவமைப்புகள், சி மா தை பெருஞ்சுவருக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பாகும்.

அபாயகரமான நிலை, அதன் கிழக்குப் பகுதியின் மிகப் புகழ்பெற்ற தனிச்சிறப்பாகும். பெருஞ்சுவர், dragonஐப் போன்று, செங்குத்தான பாறையில் வளைவாக கட்டப்பட்டிருக்கிறது. இது கிழக்கு வடக்கு திசையில் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் மீட்டருக்குள், 14 தற்காப்புக் கோபுரங்கள் உள்ளன.

சி மா தை பெருஞ்சுவரில் இரு தனிச்சிறப்பு வாய்ந்த கோபுரங்கள் இருக்கின்றன. ஒன்று, தேவதை என்ற கோபுரம் ஆகும். அது, ஒரு மறிமானால் மாறியது என்று கூறும் பழங்கால கதை ஒன்றுண்டு. வெண் கற்களால் அமைக்கப்பட்ட வாயிலில் தாமரைகள் செதுக்கப்பட்டுள்ளன. இது, முழுமையான பெருஞ்சுவரில் மட்டும் இருக்கிறது. இன்னொன்று, வாங் சிங் என்ற கோபுரம் ஆகும். அது, கடல் மட்டத்திலிருந்து 986 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இது பெய்ஜிங்கில் காணப்படும் தொல்பொருட்களில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதாகும்.

சி மா தை பெருஞ்சுவர், முழுமையான பெருஞ்சுவரில் மிக சிறந்த பகுதியாகும். அது, ஐ.நாவின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் உலகளவில் நிலை தலைசிறந்த தொல் பொருளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.