• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-29 19:43:40    
சீன வேளாண் துறை

cri

1949ம் ஆண்டில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், சீன வேளாண் துறை மேலும் நவீன கருவிகளின் பயன்பாட்டின் துணையோடு, சீராக வளர்ச்சியடைந்தது. உலகின் 7 விழுக்காட்டு வேளாண் நிலங்களை மட்டுமே கொண்ட சீனா, உலகின் ஐந்தில் ஒரு பகுதி மக்களின் உணவுத்தேவையை சமாளிக்கவேண்டிய நிலை. வேளாண் துறையிலான அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டில், மிக முன்னேறிய நாடுகளுடனான இடைவெளியை சீன தொடர்ச்சியாக குறைத்துக்கொண்டிருக்கிறது. 1942ம் ஆண்டில் 20 விழுக்காடாக இருந்த, சீனாவின் வேளாண் துறையிலான அறிவியல் தொழில்நுட்பத்துறைகளின் பங்களிப்பு தற்போது 42 விழுக்காடாக அதிகரித்துள்ளது. உயிரி தொழில்நுட்பம், புதிய உயர் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை ஆய்வுகளில் சீனாவில் வேளாண் அறிவியல் தொழில்நுட்பத்துறை வெகுவாக முன்னேறியுள்ளன. தாவர செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சி, மகரந்தப்பை வளர்ச்சி, மரபணு சார் ஆய்வுகள் முதலியவற்றின் பயன்பாடுகள், உலகின் முன்னேறிய நிலையை எட்டியுள்ளன. கலப்பின நெல், கலப்பின சோளம், கலப்பு பயிர் செய்கை முதலியவையும் உலகின் முன்னணியில் இடம்பெற்றுள்ளன. கலப்பின அவரையின் மேன்மையை சரியாக பயன்படுத்துவது தொடர்பில் முக்கிய முன்னேற்றங்கள் பெறப்பட்டுள்ளன.

1976ம் ஆண்டுக்கு பின் சீனாவில் நெல் பயிரிடும் நிலங்களின் அளவு அதிகரித்தது. அவற்றில் பயிரிடப்பட்ட நெல்வகைகள் 1994ம் ஆண்டு வரையில் மொத்த 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி டன் விளைச்சலை தந்தன.

ஹுனான் மாநிலத்தைச் சேர்ந்த யுவான் லொங்பின் எனும் ஆசிரியர், கலப்பின வீரியத்தின் மூலம் புதிய நெல் வகைகளை கண்டுபிடிக்கும் ஆய்வை முன்மொழிந்தார். 1964ல் இண்டிகா என்ற கலப்பின நெல்லின் ஆராய்ச்சி துவங்கியது. இண்டிகா என்பது நீளமான, பெரிய நெல்மணியை கொண்டது. ஜப்போனிகா என்பது குறுகிய, சிறிய நெல்மணியை கொண்டது. சீனாவில் இந்த இண்டிகா மற்றும் ஜப்போனிகா ஆகிய இருவகை கல்ப்பின நெல் வகைகள் பரவலாக பயிரடப்படுகின்றன.