• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-29 19:47:12    
ஜப்பானில் முன்னேறிய தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்ட ஹு பெய் மாநிலத்து விவசாயிகள்

cri

சுன் சியாங் நகரம் சீனாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஹு பெய் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய இடமாகும். அங்குள்ள நிலம் செழிப்பானது. அதிக அளவிலான உற்பத்தி பொருட்கள் அங்குண்டு. பழங்காலம் தொட்டு, உள்ளூர் விவசாயிகள் பகலில் உழைப்பு, இரவில் ஓய்வு என்ற வடிவத்திலான வாழ்க்கையில் மனம் நிறைவடைகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், மாற்றங்கள் ஏற்பட்டன. மென்மேலும் அதிக மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, வேளாண் தொழில் நுட்பம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். தாய் நாட்டுக்குத் திரும்பிய பிறகு, தாம் கற்றுக்கொண்ட முன்னேறிய வேளாண் தொழில் நுட்பத்தையும் வேளாண் நிர்வாக அனுப்பவங்களையும் பயன்படுத்தி, அவர்கள் புதிய தொழில் நடத்துகின்றனர்.

Sui wan என்னும் ஊர், சுன் சியாங் நகரில் அமைந்துள்ளது. உ

ள்ளூர் கால்நடை வளர்ப்பு மேலாண்மை வாரியத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 6 பன்றி வளர்ப்பு மண்டலங்களில் இது ஒன்றாகும். தற்போது, ஊரில் மொத்தம் 100க்கும் அதிகமான குடும்பங்கள் பன்றிகளை வளர்கின்றன. இத்தகைய பெரும் அளவிலான வளர்ப்பு தொழில் நடத்துவதில், he jia guo என்பவரின் பங்கைத் தவிர்க்க முடியாது. அவர், ஜப்பானுக்குச் சென்று வேளாண் ஆய்வு மேற்கொண்ட முதலாவது சீன விவசாயி ஆவார் அவர் கூறியதாவது

ஜப்பானுக்கு ஆய்வு மாணவர்களை அரசு அனுப்பும் என்பதைக் அறிந்த போது, வியப்படைந்தேன். விவசாயியான நான், வாழ்க்கையில் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு என்பதை முன்பு நினைக்கவேயில்லை என்றார் அவர்.

1998ம் ஆண்டு, அவர் ஜப்பானின் Ibaraji-ken என்னும் பிரதேசத்தில் முலாம் பழம், செறி பழம் ஆகியவற்றைப் பயிரிடும் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். அங்கே ஓராண்டு வாழ்க்கை மற்றும் கல்விக்குப் பின், அவர் முலாம் பழம், செறி பழம் ஆகியவற்றைப் பயிரிடும் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தெரிந்ததுடன், நவீன ஜப்பானிய வேளாண் துறையின் வளர்ச்சியையும் முழுமையாக கற்றுக் கொண்டார். விவசாயிகளின் உற்பத்தி நிர்வாகம், வருமான அதிகரிப்பு முதலிய துறைகளில் ஜப்பானிய விவசாயிகள் தற்சாப்புடன் நிறுவிய வேளாண் ஒன்றிணைப்பு குழு ஆற்றிய மாபெரும் பங்கை அவர் ஆழமாக உணர்ந்தார்.

விவசாயிகளுக்கு உற்பத்தி மூலவளங்களையும், நாணயம், காப்புறுதி, நிர்வாகம் முதலிய துறைகளிலான வழிக்காட்டலையும் ஜப்பானிய வேளாண் ஒன்றிணைப்பு குழு விவசாயிகளுக்கு வழங்குகின்றது. விவசாயிகளின் பணி வயலில் அயராது உழைப்பது மட்டுமே.

வேளாண் உற்பத்தியிலான ஜப்பானின் அனுபவங்கள் he jia guo அவருக்கு புதிய எண்ணம் ஏற்படுத்தின. சொந்த ஊரில் இந்த ஒத்துழைப்பு அமைப்பின் நிர்வாக வழிமுறையைப் பயன்படுத்தலாம் என்று அவர் நினைத்தார். அவர் கூறியதாவது

10 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஆய்வு மேற்கொண்ட அனுபவம் மூலம், நாங்கள் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்துவதுடன், ஜப்பான் மேற்கொள்ளும் வேளாண் துறையிலான முன்னேறிய கண்ணேட்டத்தையும் அறிவியல் நிர்வாக வழிமுறைகளையும் கற்றுக் கொண்டோம். சீனாவின் வேளாண் உற்பத்திக்கு சாதகமான வளர்ச்சி பாதையைக் கண்டுப்பிடித்துள்ளோம் என்றார் அவர்.

சுன் சியாங் நகருக்குத் திரும்பிய பிறகு, பன்றி வளர்ப்பு குடும்பங்களை இணைத்து கால்நடை வளர்ப்பு சங்கத்தை அவர் உருவாக்கினார். ஒவ்வொரு உறுப்பு குடுபங்களுடனும் உடன்படிக்கையை உருவாக்கியது. தனித்தனியாக 200 யுவான் கட்டணம் செலுத்திய பின், அக்குடும்பங்கள், சங்கத்தின் நிர்வாகத்தில் சேர்க்கப்பட்டன. சங்கம் அவற்றுக்கு பன்றிகளுக்கான தீனி வாங்கி கொடுப்பதே பன்றி வளர்ப்புக்கான தொழில் நுட்பப் பயிற்சியையும் வழங்குகின்றது.

தற்போது, இச்சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்த 7 முதல், இன்று 200ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் ஆண்டு வருமானமும் 25 ஆயிரம் யுவானைத் தாண்டியுள்ளது.

சின் தியன் ஊரிலான zhang guang ming என்னும் விவசாயி ஜப்பானில் வேளாண் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். 2005ம் ஆண்டில் ஜப்பான் சென்றடைந்த zhang guang ming அங்குள்ள எல்லாம் புதியன என்று உணர்ந்தார். குறிப்பாக, ஜப்பானின் வேளாண் தொழில் நுட்பம் மற்றும் இயந்திரங்களின் பயன்பாட்டு பரவல் அவரது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அவர் கூறியதாவது

ஜப்பானின் Ibaraji-ken மாவட்டத்தின் வேளாண் ஒன்றிணைப்பு குழுவில் சேர்ந்தேன். எனது தலைவரிடமிருந்து எந்த வகை பயிர் பயிரிட்டால், அது பற்றிய அறிவைக் கற்றேன். அவர் நெல், காய்கறி ஆகியவற்றைப் பயிரிட்டார் என்றார் அவர்.

ஓராண்டு ஆய்வுக்குப் பின், zhang guang ming தனது சொந்தத் திட்டத்தை வகுத்தார். ஜப்பானில் கல்வி பெறுவது அரிய அனுபவமாகும். வீட்டுக்குத் திரும்பிய பின், நல்ல தொழில் நடத்த வேண்டும் என்று அவர் கருதினார். அவர் கூறியதாவது

புதிய சோஷலிய கிராமத்தைக் கட்டியமைப்பதற்கு நவீன தொழில் நுட்பங்களை பெறும் புதிய ரக விவசாயிகள் தேவைப்படுகின்றனர். 2005ம் ஆண்டு ஜப்பானில் கற்றுக்கொண்ட அறிவுகள் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கின. ஓராண்டு முயற்சி மூலம், ஜப்பானின் முன்னேறிய வேளாண் தொழில் நுட்பத்தையும் முன்னேறிய வேளாண் மாதிரிகளையும் கற்று கொண்டுள்ளேன். ஊருக்குத் திரும்பிய பின், இவற்றையும் எமது பாரம்பரிய வேளாண் தொழில் நுட்பத்தையும் இணைத்து, வழக்கத்துக்கு மாறான வயல்களின் பயன்பாட்டை உயர்த்தினேன். இவ்வாண்டு எனது குடும்ப வருமானம், பாரம்பரிய வழிமுறை மூலம் கிடைத்ததை விட 3 மடங்காகிவிட்டது. வெற்றி பெற்ற பின், என்னுடைய முன்னேறிய அனுபவங்களை சுன் சியாங் நகரிலுள்ள மேலும் அதிகமான விவசாயிகளிடையில் பரவலாக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

இந்த விவசாயிகள் ஜப்பானுக்குச் செல்வதற்கு முன், 3 திங்கள் ஜப்பானிய மொழி பயிற்சி பெற வேண்டும். இந்நகரிலுள்ள ஒரு பயிற்சி தளத்தில், 10க்கு அதிகமான மாணவிகளை எமது செய்தியாளர் சந்தித்தார். பயிற்சிக்குப் பின் அவர்கள் ஜப்பானுக்குச் சென்று கறவை பசுக்கள் வளர்ப்பு நுட்பத்தைக் கற்றுக்கொள்வர்.

இதுவரை சுன் சியாங் நகரம் 79 தொகுதியைச் சேர்ந்த சுமார் 1100 ஆய்வு மாணவர்களை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளது. இந்நகரின் மேயர் tian wen biao கூறியதாவது

ஆய்வு மாணவர்களை அனுப்புவதன் மூலம், சுன் சியாங் நகரின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதுடன், ஜப்பானின் முன்னேறிய வேளாண் தொழில் நுட்பத்தையும், நிர்வாக அனுபவங்களையும் தொழில் நடத்தும் கருத்துக்களையும் கற்று திரும்பி வரலாம். இரு நாட்டு மக்களுக்கிடை பொருளாதாரம் , பண்பாடு மற்றும் உணர்வுபூர்வ பரிமாற்றத்தை முன்னேற்றுவதோடு, ஜப்பான் நாட்டிலுள்ள உழைப்பாற்றல் பற்றாகுறைவை தணிவு செய்யலாம். இதனால் இணைந்த பொது வெற்றி என்ற பயன் பெறப்பட்டுள்ளது என்றார் அவர்.