• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-29 09:00:43    
நேயர்களின் கருத்துக்கள்

 


cri
கலை: வணக்கம் நேயர்களே. உங்கள் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களின் தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

க்ளீட்டஸ்: ஒரு வாரம் கழித்து நமது தமிழ்ப்பிரிவின் 45 ஆண்டு நிறைவு, இரு வாரங்கள் கழித்து 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி என பரபரப்பான நாட்களை எதிர்நோக்குகிறோம்.

கலை: நினைவில் நிறுத்தக்கூடிய இனிய இந்த விழாக்களை பற்றிய விபரமான தகவல்களை வழமைபோல் உங்களுக்கு அறியத் தருவோம். எமது ஒலிபரப்பையும், இணையதளத்தையும் கவனமுடன் கேட்டு, பார்த்து, படித்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
க்ளீட்டஸ்: இலங்கை உக்குவளை அகீலா மனாப் எழுதிய கடிதம். சீனத் தமிழொலி இதழ்களின் மூலம் சீனாவின் தாவோர் இனம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இலங்கையிலிருந்து கேட்பது ஒரு அதிர்ஷடம். நடைபெறவுள்ள பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, எந்த சிக்கலுமின்றி, சுமூகமாக நடைபெற வாழ்த்துகிறேன்.
கலை: சானார்பாளையம் எஸ். குணசேகரன் எழுதிய கடிதம். விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி மற்ற வானொலிகள் சொல்லாத செய்திகளை, புது விதமான விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. செய்தியறிக்கையில் இடம்பெறும் உலகச்செய்திகளும் உண்மையானவையாக இருக்கின்றன. 8. 8. 2008 துவங்கும் பெய்சிங்

ஒலிம்பிக் சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
க்ளீட்டஸ்: வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் எழுதிய கடிதம். ஜூன் திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பான நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பல்லவி. கே. பரமசிவன் அவர்கள் தன்னுடிஅய கடந்த கால பணி பற்றி சுவைபட எடுத்துக்கூறினார். 1991-ல் நடைபெற்ற ஈரோடு கருத்தரங்கு பற்றி அவர் குறிப்பிட்டார். இந்த கருத்தரங்கு ஏதோ நேற்று நடைபெற்றது போலிருக்கிறது. முதன்முதலாக நான் சிறந்த நேயர் என்ற பரிசை பெற்றதும், எஸ், சுந்தரன் அவர்களை முதன்முறையாக சந்தித்ததும் இந்த கருத்தரங்கில்தான். கடந்த பல ஆண்டுகளாக சீன வானொலியின் நேயராக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கலை: இலங்கை காத்தான்குடி ஏ. எம். பஸ்லான் எழுதிய கடிதம். கடந்த 5 ஆண்டுகளாக சீன வானொலியை கேட்டு வருகிறேன். உற்சாகமாக செயல்பட்டு உறவை வளர்க்க, தூரத்து தொண்டன் என்ற பெயரில் அவ்வப்போது சில கவிதை வரிகளையும் சீன வானொலிக்கு எழுதி வருகிறேன். அரை மணியிலிருந்து ஒரு மணி நேரமாக மாறிய ஒலிபரப்பில் மக்கள் சீனம், விளையாட்டுச் செய்திகள், உங்கள் குரல், இசை மற்றும் செய்திகளை கேட்டு வருகிறேன்.

க்ளீட்டஸ்: மும்பை சுகுமார் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் பல அரிய தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளது, பாராட்டுக்கள். தாங்கள் அண்மையில் அனுப்பிய கடிதங்களும், இதழ்களும் கிடைத்தன, நன்றி. பெய்சிங் ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.

கலை: செந்தலை என். எஸ். பாலமுரளி எழுதிய கடிதம். நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்களையும், ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் பற்றிய செய்திகளையும் கேட்டு மகிழ்ந்தேன். அன்றாட சீன மொழி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியதன் மூலம் நேயர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டீர்கள். நன்றிகள்.

 


மின்னஞ்சல் பகுதி
சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
அழகான குவாங்சி என்ற பொது அறிவுப் போட்டியினை முன்னிட்டு தமிழ்ப்பிரிவு அளித்த நான்கு கட்டுரைகளை கேட்டேன். இதன் மூலமாக குவாங்சி மாநிலத்தின் புகழ்பெற்ற சன்ஹா விழா உள்ளிட்ட பல தகவல்களையும், புகழ் பெற்ற சுற்றுலா இடங்களையும் பற்றி தெரிந்துகொண்டேன். மேலும் இணைய தளத்தில் இடம் பெற்ற குவாங்சி மாநிலத்தின் இயற்கைக் காட்சிகளின் நிழற்படங்களையும் கண்டுகளித்தேன். என் மனதை குவாங்சி மாநிலம் கொள்ளைகொண்டது என்றால் மிகையாகாது.

சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன்
அழகான குவாங்சி என்னும் ந‌க‌ரம் ப‌ற்றி க‌ட்டுரைகள் கேட்டேன். இந்த ந‌க‌ரம் ம‌லைக‌ளாலும் ப‌சுமையான மூங்கில் காடுக‌ளாலும் சியாங் ஆற்றினாலும் மிக அழ‌காய் இருக்கிறது. நீர் வ‌ள‌த்தாலும் சுத்த‌மான காற்றினாலும் இங்கு வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்து வ‌ருகிறது. இங்கு அழ‌கான நீர் வீழ்ச்சிக‌ளும் உள்ளன. இந்ந‌கரை நாங்கள் நேரில் பார்ப்பது போல் உள்ளது என்று சீன வானொலி அறிவிப்பாள‌ர்கள் கூறுவதை கேட்டபோது பெய‌ருக்கேற்ற‌படி குவாங்சி அழகு வாய்ந்தது என்று உறுதியாக நம்ப முடிகிறது.
ஊத்தங்கரை, கவி.செங்குட்டுவன்
14.07.2008 -ல் இடம் பெற்ற "தூய்மையான ஒலிம்பிக் என்ற கருத்து" எனும் செய்தித் தொகுப்பு மிக அருமை. சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்த உரிஐ பெற்றதற்கு பிந்திய 7 ஆண்டுகளுக்குள், ஒரு தொகுதி ஒலிம்பிக் விளையாட்டு திடல்கள், அரங்குகள் வசதிகள் ஆகியவற்றுக்கான கட்டுமானத்தை தரமிக்கதாக நிறைவேற்றியுள்ளது. தூய்மையான ஒலிம்பிக் என்ற கருத்தை செயல்படுத்துவதற்காக இக் கட்டடங்களையும் வசதிகளையும் உருவாக்கும் போக்கில் எரியாற்றல் மற்றும் நீரின் சிக்கன பயன்பாட்டுக்கு சீனா முக்கியத்துவம் அளித்ததோடு, பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய தொழில் நுட்பங்களையும் கடைபிடித்தது வருகிறது. இவற்றை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பாராட்டுக்கள் !

 


ஊட்டி, S.K.சுரேந்திரன்
ஜீலை திங்கள் 16ம் நாள் ஒலிபரப்பான செய்தியில் பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் போது பெய்சிங் மாநகரின் காற்றுத்தரம் மற்றும் போக்குவரத்து நிலைமையை மேலும் மேம்படுத்தும் வகையில் சீனாவில் அமைந்துள்ள 10ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான82 வணிக வளாகங்கள் தமது பணி நேரத்தை திருத்தியமைக்கும் என்பதை அறிந்தேன். பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கென சீனா எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவையாகும்.

பிரான்ஸ், வெங்கடேசன் கீதா மற்றும் நாதன் சிவா
அறிவிப்பாளர்களின் இனிய குரலை கேட்டோம். சீனாவை பற்றியும், சீனப் பண்பாடு பற்றியும் அறிவதில் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக கொஞ்சு தமிழ் உச்சரிப்பில் நீங்கள் வாசிப்பதை கேட்க இனிமையாக இருகிறது.

வளவனூர், முத்துசிவக்குமரன்
ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்களின் பணிகளைப் பற்றிய செய்திகளை இணைய தளத்தில் கண்டேன். இந்த தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் பணியை மிகுந்த உற்சாகத்துடனும், அதேவேளை மிகுந்த கவனுத்துடனும் செய்வார்கள் என்பது நிச்சயம். அவர்களின் இந்த அரிய பணிகள் சிறக்க வாழ்த்துவோம்.
ஊட்டி, எஸ். நித்தியா
ஜூலை 17 நாள் இடம்பெற்ற செய்தியில் திபெத் இன்றும் நேற்றும் என்ற மாபெரும் கண்காட்சி ஏப்ரல் 30ம் நாள் பெய்சிங்கில் தொடங்கிய பிறகு, சீனாவின் பல்வேறு சமூக வட்டாரங்களில் மாபெரும் செல்வாக்கை உருவாக்கியுள்ளதை அறிந்தேன். வெற்றிகரமாக நடந்து வரும் இக் கண்காட்சியை சுமார் 1 இலட்சத்து 10 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதையும், ஜீலை திங்கள் 25ம் நாள் நிறைவடைய இருந்த இக்கண்காட்சி பார்வையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க தொடர்ந்து நடைபெறும் என்ப‌தையும் அறிந்து ம‌கிழ்ச்சிய‌டைந்தேன். மேலும் 150 நாடுகளைச் சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்ட‌தையும் தெறிந்து கொண்டேன். இக் க‌ண்காட்சி மூல‌ம் அவ‌ர்க‌ள் திபெத்திலான‌ உண்மை நில‌வ‌ர‌ங்க‌ளை அறிந்திருப்பார்க‌ள் என்ப‌தில் அய்ய‌ம் இல்லை.