மலேசிய விளையாட்டு வீரர்களின் கருத்துக்களின்படி, உபசரிப்பு நாடான சீனா, பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குகிறது. விளையாட்டு வீரர்கள் இந்த வசதிகளுக்கு மனநிறைவு தெரிவித்தனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்ற மலேசிய பிரதிநிதிக் குழுவின் தலைவர் hekecai 28ம் நாள் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.
இது வரை, மலேசிய பிரதிநிதிக் குழு, சீனாவில் எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை. பின்னணிப் பணிகள் அனைத்தும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. தவிர, மலேசிய நாட்டுப் படகு போட்டி வீரர் linliangjie, hekecaiக்கு அனுப்பிய மின்னஞ்சலில் Qingdao நகரின் ஒலிம்பிக் விளையாட்டு வசதிகளை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
|