பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நுழைவுச் சீட்டு
cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து ஆட்டங்களின் நுழைவுச் சீட்டுகளும் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, முந்திய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது என்று அண்மையில், இத்தாலி Corriere della Sera கூறுகின்றது. சீனா மற்றும் உலகளவில் விற்பனை செய்யப்பட்ட நுழைவுச்சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை, 68 இலட்சத்து 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல், பெய்சிங்கில், இறுதிகட்ட நுழைவுச்சீட்டுகளை வாங்கும் வகையில், மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றனர்.
|
|