• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-30 19:32:42    
A Qin Sao சேவை மையம்

cri

கடந்த சில ஆண்டுகளாக, 40 வயது முதல் 50 வயது வரையான வேலை இழந்த தொழிலாளர்கள் பலர், அதிகம் கல்வி பெற்றிருக்கவில்லை. தத்தமது குடும்பத்தினரைப் பராமரிக்க வேண்டும். எனவே, மறுவேலைவாய்ப்பை நாடுவதில் அவர்கள் இன்னல்களைச் சந்தித்துள்ளனர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க, 2005ஆம் ஆண்டின் ஜுலை திங்கள் Wu Xi நகரின் Bei Tang வட்ட அரசின் ஆதரவுடன், "A Qin Sao" என்னும் ஒரு சேவை மையம் நிறுவப்பட்டது. இச்சேவை மையத்தின் அலுவலகத்தில், மையத்தின் தலைவர் Jin Xia அம்மையார் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

"A Qin Sao சேவை மையம், Wu Xi நகரில் வீட்டு வேலைவாய்ப்பு வழங்கும் முதலாவது அமைப்பாகும். "Qin" என்றால், அயரா உழைப்பு என்று பொருள். Sao என்றால், அண்ணி என்று பொருள். 40 முதல் 50 வயது வரையான வேலை இழந்த மக்கள், அயரா உழைப்புடன் வேலை செய்து, செல்வமடைய வேண்டும் என்று விரும்புகின்றோம்" என்றார், அவர்.

இம்மையம் நிறுவப்பட்ட பின், மையத்தின் பணியாளர்கள் முதலில் குடியிருப்புப் பிரதேசங்களில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். மறு வேலைவாய்ப்பை நாட விரும்பிய, ஆனால் வீட்டில் குழந்தையைப் பராமரிக்க வேண்டிய நிலையில் இருந்த உழைப்பு ஆற்றல் வாய்ந்தோருக்கும், ஊனமுற்றோருக்கும் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர். Jin Xia அம்மையார் கூறியதாவது:

"முதலில், சந்தையின் தேவை மற்றும் தனிச்சிறப்புக்கிணங்க, அவர்களுக்கு இலவச பயிற்சி அளித்துள்ளோம். அவர்கள் குறுகிய காலத்தில் புதிய வேலைக்கு பொறுப்பு ஏற்கும் பொருட்டு, வீட்டு வேலை, பின்னல் வேலை முதலியவற்றுக்கு தேவைப்படும் அடிப்படை தொழில் திறனை அவர்களுக்கு கற்பிக்க, தொழிற்பள்ளி ஆசிரியர்களையும், தொழில் நுட்பத் திறமைசாலிகளையும் அமர்த்தியுள்ளோம்." என்றார், அவர்.

இச்சேவை மையத்தில், வீட்டு வேலை சேவை, பின்னல் வேலை குழு, தொழில் நிறுவனங்களுக்கென கைவினைப் பொருட்களைப் பதனீடு செய்யும் இடம் ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெறுகின்றன. 40 முதல் 50 வயது வரையான வேலை இழந்தோர், ஊனமுற்றோர் உள்ளிட்ட நலிந்த குழுவினருக்கென இம்மூன்று பிரிவுகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

பயிற்சி அளிக்கப்பட்ட பின், வேலை மற்றும் சேவை கருத்துக்கள் பற்றி அவர்கள் புதிய புரிந்துணர்வைப் பெற்றுள்ளனர். அவர்களின் வேலைத் திறனும், சேவை நிலையும் உயர்ந்துள்ளன. சேவை அளிக்கப்படுபவரின் மனநிறைவு அதிகரித்துள்ளது.

இந்த சேவை மையத்தில் Zhen Gong Fu என்ற பெயரிலான பின்னல் வேலைப்பாடு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் Sofa மெத்தை, போர்வை, பல்வேறு பாணிகளிலான கம்பளி ஆடைகள், சுற்றுலா கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 160 வகைகள் இடம்பெறுகின்றன. இந்த பின்னல் வேலைப்பாடு பொருட்கள் மக்களால் வரவேற்கப்படும் அதே வேளையில், பொருளாதாரப் பயனும் பெற்றுள்ளன. பரவல் மற்றும் பிரச்சாரத்தின் மூலம், பல கடைகள், Zhen Gong Fu என்ற பின்னல் வேலைப்பாடு பொருட்களை விற்பனை செய்ய இசைந்துள்ளன.

சுமார் 40 வயதான Wang Xiu Feng அம்மையார், வேலை இழந்த தொழிலாளியாவார். அவளது கணவன், ஊனமுற்றோர் ஆவான். அவரது மகன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றார். Wang Xiu Feng குடும்பச் சுமையை ஏற்க வேண்டியிருந்தது. A Qin Sao சேவை மையம் பற்றி கேள்விப்பட்ட பின், பின்னல் பயிற்சியில் கலந்து கொள்ள அவர் பதிவு செய்தார். தற்போது மறுவேலை வாய்ப்பு மூலம், திங்களுக்கு சுமார் 800 யுவானை அவரால் ஈட்ட முடியும். அவரது பொருளாதாரச் சுமை குறைந்து விட்டது.

ஊனமுற்றோருக்கு மறு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, A Qin Sao சேவை மையம், உள்ளூர் பிரதேசத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, அந்த நிறுவனங்களுக்கென பொருட்களைப் பதனிடும் பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ளது. இப்பிரதேசத்தின் ஊனமுற்றோர் மற்றும் வேலை இழந்தோர், நிறுவனங்களின் உற்பத்தியில் கலந்து கொண்டு, தத்தமது வீட்டிலிருந்தபடி வேலை செய்வதற்கு இது சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது.

ஊனமுற்றோர் அதிக நலன்களைப் பெற்றுள்ளனர். Tian Min அம்மையார் அவர்களில் ஒருவர் ஆவார். அவர் கூறியதாவது:

"இங்கு வந்து, ஊனமுற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர். இங்கு அவர்கள் தத்தமது திறமையை வெளிக்கொணர்ந்து, வருமானத்தை அதிகரிக்க முடியும். இங்கு நண்பர்கள் பலருடன் பழகி உள்ளேன். நண்பர்கள் என் மீது கவனம் செலுத்துகின்றனர்" என்றார், அவர்.

கடந்த சில ஆண்டுகளாக, சுமார் 550 வேலை இழந்தோருக்கும், 47 ஊனமுற்றோருக்கும் A Qin Sao சேவை மையம் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. "இணக்கமான Wu Xi நகரின்" உருவாக்கத்தை இது பெரிதும் தூண்டியுள்ளது.