• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-30 15:10:00    
பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கான பாகிஸ்தான் தூதரின் வாழ்த்து

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலக மக்கள் புரிந்துணர்வை அதிகரித்து, நட்புறவை ஆழமாக்கும் மாபெரும் நிகழ்ச்சியாகவும், வேறுபட்ட பண்பாடு மற்றும் மதங்களுக்கான பரிமாற்ற மேடையாகவும் மாற வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் பஷிர் விருப்பம் தெரிவித்தார்.

சீன அரசும் மக்களும் பெய்ஜிங் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு போதியளவில் ஏற்பாட்டுப்பணி செய்துள்ளனர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான விளையாட்டு நிகழ்ச்சியாக மாறும் உறுதி என்று அவர் தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகளவில் மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியாக மட்டுமல்ல, ஓர் உலகம் ஓரு கனவுக்காக உலக மக்கள் அனைவரும்

கூட்டாக முயற்சி செய்யும் துவக்கமாகவும் உள்ளது. ஓர் உலகம், ஒரு கனவு என்ற பெய்ஜிங் ஒலிம்பிக் முழக்கத்தின் படி, சீனா, பாகிஸ்தான் அல்லது வேறு எந்த நாடும், அனைத்து மனிதக்குலமும், சகோதர சகோதரிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை, ஒலிம்பிக் எழுச்சி உணர்த்துகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக், இத்தகைய வாய்ப்பை நிச்சயமாக வழங்கும். இங்கு, மக்கள், தமது அனுபவங்களை பகிர்ந்து, கனவுகள நனவாக்கலாம் என்றார் அவர்.
சர்வதேச செய்தி ஊடகங்களில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை

எதிர்த்த ஒரு சில நடவடிக்கைகளை பற்றி குறிப்பிடுகையில், பாகிஸ்தான் அரசும் மக்களும் எப்பொழுது சீன மக்களுடன் ஒரே நிலைப்பாட்டில் நிற்கின்றனர் என்று பஷிர் வலியுறுத்தினார். பாகிஸ்தான் மக்கள், முன்பைப் போன்று, சீன மக்களுடன் இணைந்து ஒத்த நிலைப்பாட்டைக் கொள்கின்றனர். சீன மக்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து, சீன பெற்றுள்ள வெற்றியில் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் சீன-பாகிஸ்தான் நட்புறவு மேன்மேலும் ஆழமாகும். பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.