• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 19:21:59    
பெய்ஜிங் ஒலிம்பிக்கான சர்வேதசச் சமூகத்தின் பாராட்டு

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக, சீனா மேற்கொண்ட மாபெரும் முயற்சியை, கடந்த சில நாட்களில், சர்வதேசச் சமூகம் வெகுவாகப் பாராட்டியது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது குறித்து, ஆழ்ந்த நம்பிக்கையும் கூறியுள்ளது.

வியட்னாம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை முழு மூச்சுடன் ஆதரிக்கும் என்று வியட்னாம் அரசுத் தலைவர் Nguyen Minh Triet ஹனோயில் கூறினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அமைதி மற்றும் ஒற்றுமையை விரும்பும் முழு மனிதகுலத்தின் எழுச்சியைக் காட்டுகிறது. இது உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்குத் துணை புரியும் என்று அவர் கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது குறித்து, தாம் நம்பிக்கை கொள்வதாக இந்தோனேசிய அரசுத் தலைவர் Susilo Bambang Yudhoyono தெரிவித்தார். பெய்ஜிங்குக்குச் சென்று, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை சந்திக்கும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முழு நாட்டு மக்களின் ஆதரவுடன், சீன அரசு, சர்வதேசச் சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதை உறுதியான இலக்காக மாற்றி வருகிறது என்று கியூபாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான லத்தீன அமெரிக்க செய்தி நிறுவனம் அண்மையில் கூறியது.