• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 10:45:05    
பெய்ஜிங்கின் சுரங்க இருப்புப்பாதை

cri

பெய்ஜிங்கின் சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்து, உயர் வேகம் மற்றும் வசதியான தனிச்சிறப்பியல்களால், நகரவாசிகளால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. பெய்ஜிங் ஒலிம்பிக் நடைபெறும் போது, சுரங்க இருப்புப்பாதை மூலம் பெய்ஜிங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது மிகவும்

வசதியாக அமைந்துள்ளது. அடுத்து, பெய்ஜிங்கில் சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்து பற்றிய விபரங்களை விளக்கிக்கூறுகின்றோம்.
தற்போது, பெய்ஜிங்கின் சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்தில், ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கின்ற ஐந்து நெறிகள் அடங்குகின்றன. அவற்றின் மொத்த நீளம் 140 கிலோமீட்டராகும். தவிர, பெய்ஜிங் ஒலிம்பிக்கை முன்னிட்டு, மூன்று புதிய நெறிகள் திறந்து வைக்கப்படுகின்றன. ஒலிம்பிக்கிற்காக கட்டியமைக்கப்பட்டு, பல்வேறு முக்கிய விளையாட்டு அரங்குகளை இணைக்கும் ஒலிம்பிக் சிறப்பு நெறி, இதில் மிகவும் குறிப்பிடத்தக்கத்து.

ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கின்ற ஐந்து நெறிகளில், சுமார் நூறு நிலையங்கள் உள்ளன. இதில், 10 நிலையஙகள், இன்னொரு தட நெறிக்கு மாறி செல்லும் நிலையங்களாகும். இந்த நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை, மிகவும் அதிகம். அவற்றின் மூலம், மக்கள், வேறுபட்ட சுரங்க இருப்புப்பாதை நெறிகளுக்கு மாறிச் செல்லலாம். ஹுநான் மாநிலத்திலிருந்து பெய்ஜிங் வந்து குறுகியக்கால பயிற்சியைப் பெறும் XU YING அம்மையார், செய்தியாளரிடம் பேசுகையில், பெய்ஜிங்கில் தங்கியிருக்கும் போது, அடிக்கடி சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்தைத் தேர்ந்தெடுப்பதாக, தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நான் தங்கியிருக்குமிடம், சுரங்க இருப்புப்பாதையின் 2வது நெறியைச் சேர்ந்த சாங்

சுவென் சியே நிலையத்துக்கு அருகில் உள்ளது. இருப்பிடத்திலிருந்து, சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்து மூலம், வெளியே சென்று பொருட்களை வாங்கி, பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் வசதியாக உள்ளது என்றார் அவர்.
பெய்ஜிங் சுரங்க இருப்புப்பாதையின் சேவை நேரம் வேறுபட்டது. பொதுவாக, காலை 5 மணி முதல், இரவு 11 அல்லது 12 மணி வரையாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாக்கள் நடைபெறும் நாட்களில், அவை, 24 மணி நேரம் இடைவிடாமல் சேவை செய்யவுள்ளன.
தற்போது, பெய்ஜிங்கில் சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்து கட்டணம், நபருக்கு 2 யுவானாகும். இருப்புப்பாதை நிலையங்களின் நுழைவாயிலில், பயணச்சீட்டு விற்பனை

செய்யுமிடம் உள்ளது. தானியாங்கி பயணச்சீட்டு விற்பனை இயங்திரம் அனைத்திலும், சீன மற்றும் ஆங்கில மொழிகளில் அவைகளை பயன்படுத்துவதற்கான விளக்கம் எழுதப்பட்டுள்ளது. இந்த தானியாங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது, 1 யுவான் காசுகள் அல்லது, 5 மற்றும் 10 யுவான் ரென்மின்பி நோட்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.