• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 19:17:56    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான மருத்துவ உத்தரவாதம்

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான மருத்துவ உத்தரவாத அமைப்பு முறை பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு மற்றும் பெய்சிங் மாநகர சுகாதார பணியகத்தின் அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, வெளிநாடுகளிலிருந்து வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு காலதாமதமின்றி உயர் பயனுள்ள மருத்துவச் சேவையை பெய்சிங் வழங்கும் என்று அவர்கள் கூறினர்.

மருத்துவ முதலுதவி அமைப்பு முறையை உருவாக்கி, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையை உயர்த்தி, பொதுச் சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்தியதோடு, திடீர் பொதுச் சுகாதார சம்பவங்களை சமாளிப்பதற்கு பெய்சிங் மாநகரம் தயார் நிலையிலுள்ளது. இதன் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பன்முக மருத்துவ உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று பெய்சிங் மாநகர சுகாதார பணியகத்தின் துணைத் தலைவர் Zheng Xiaohongஅம்மையார் தெரிவித்தார்.

வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் சிறப்பு இரத்த வகைகளுக்கான தேவைக்கு பெய்சிங் மாநகரம் முக்கியத்துவம் அளித்ததுள்ளது. இதற்கு, தேவைப்படும் வெளிநாட்டவருக்கு இரத்தத்தானம் செய்யும் அணியை பெய்சிங் சிறப்பாக உருவாக்கியது என்று Zheng Xiaohongஅம்மையார் எடுத்துக்கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படும் அரிய வகை ரத்தத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், கடந்த சில ஆண்டுகளில், Rh-Negarive வகை இரத்தத்தானம் செய்பவர்களை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த Negarive வகை இரத்தம் கொண்ட மக்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகமில்லை. ஆனால், மேலை நாட்டு வெள்ளையர்களில் இந்த Negarive வகை இரத்தம் கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாகும். தற்போது, இத்தகைய Negarive வகை ரத்தம் கொண்ட 1000 இரத்தத்தானம் செய்பவர்கள் இருக்கின்றனர். அவச நிலை ஏதேனும் ஏற்படும் போது, அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு இரத்தத்தானம் செய்யலாம் என்று Zheng xiaohong அம்மையார் கூறினார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான மருத்துவ உத்தரவாத அமைப்பு முறை, பெய்சிங் மாநகர், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை இணைந்து நடத்தும் நகரங்கள் ஆகியவற்றிலான அனைத்து ஒலிம்பிக் திடல்களையும் அரங்குகளையும் உள்ளடக்கும். 220க்கு அதிகமான மருத்துவ நிலையங்கள், பல நூறு அவசர மருத்துவ உதவி வண்டிகள், 300 சீனா மற்று வெளிநாட்டு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ தொண்டர் அணி ஆகியவை இவ்வமைப்பு முறையில் இடம்பெறுகின்றன. இதன் மூலம், அவசர மருத்துவச் சேவையை வழங்க முடியும் என்று ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் அதிகாரிகள் விளக்கினார்.

தவிர, ஒலிம்பிக கிராமத்தில் பன்நோக்கு மருத்துவ நிலையம் இருக்கிறது. இந்நிலையத்திலான 600க்கு மேலான மருத்துவப் பணியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியளிப்பவர்கள், அதிகாரிகள், செய்தியாளர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு பன்முக மருத்துவச் சேவையை வழங்குவர். சீனப் பாரம்பிரய மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு, அக்குபங்ச்சர், உடம்யை பிடித்து விடும் மசாஜ் உள்ளிட்ட சிகிச்சை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்சிங்கிற்கு வந்துள்ள சில வெளிநாட்டு ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுக்களைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான மருத்துவச் சேவைக்கும் வசதிகளுக்கும் மனநிறைவு தெரிவித்தனர். ஆஸ்திரேலிய ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் மருத்துவ அணியின் தலைவர் Peter Baquie, ஒலிம்பிக கிராமத்திலுள்ள பன்நோக்கு மருத்துவ நிலையத்தை வாயாரப் பாராட்டினார். அவர் கூறியதாவது:

இது, மிகவும் சிறப்பானது. இந்த மருத்துவ நிலையம் எங்களுக்கு பெரும் உதவி அளிக்கிறது. இந்த மருத்துவ நிலையம் வசதியான இடத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. தவிர, எக்ஸ்ரே ஊடுகதிர், NMR எனப்படும் அணுக்கதின் காற்த ஒத்ததிர்வு முதலிய முன்னேறிய கருவிகள் இம்மருத்துவ நிலையத்தில் இருக்கின்றன என்று கூறினார்.

விளையாட்டு வீரர்களை தவிர, சீன மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கும் இம்மருத்துவ உத்தரவாத அமைப்பு முறை இலவச மருத்துவச் சேவையை வழங்கும் என்று விளையாட்டுப் போட்டி சேவை விவகாரத்துக்கு பொறுப்பான பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணைத் தலைவர் Dai Jianping கூறினார்.
பெய்சிங் மாநகர் மற்றும் விளையாட்டுப் போட்டியை இணைந்து நடத்தும் நகரங்களிலுள்ள அனைத்து ஒலிம்பிக் மருத்துவ நிலையங்களும் போதிய முன்னேற்பாட்டை செவ்வனே செய்துள்ளன. 24 மணிநேர மருத்துவ சேவையை அவை வழங்கும் என்று தெரிய வருகின்றது.