• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 15:52:22    
ஒலிம்பிக் கிராமத்துக்கு மனநிறைவு

cri

பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடங்கள் உள்ள ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்ட பிறகு, பல நாடுகளின் விளையாட்டு பிரதிநிதிக் குழுக்கள் இதில் நுழைந்துள்ளன. ஒலிம்பிக் போட்டிக்கான பல்வேறு வசதிகள் மற்றும் சேவை குறித்து, பிரதிநிதிக் குழுக்கள் மனநிறைவு தெரிவித்தன.ஒலிம்பிக் கிராமத்தின் பல்வேறு வசதிகளை நைஜீரியாவின் விளையாட்டு பிரதிநிதிக் குழுவின் முன்னேற்பாட்டுப் பணி பொறுப்பாளர் உமரு தல்பா ஷீவா வெகுவாக பாராட்டினார்.

தமது நாட்டின் விளையாட்டு சொந்த வீரர்களில் இருப்பது இங்கே அவர்களது வீடுகள் போல் முழுமையாக ஒய்வு கொள்ளலாம் என்று அவர் கூறினார். தவிர, இக்கிராமத்திலுள்ள தன்னார்வத் தொண்டர்களை ஷீவா உயர்வாக பாராட்டியதோடு, அவர்கள் மிகவும் பொறுப்பாகவும் உற்சாகமாகவும் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.பெய்சிங் ஒலிம்பிக் கிராமத்தில் பல்வகை உணவுப் பொருட்கள் மிகவும் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் உள்ளன. அவற்றை உட்கொள்வதில் பிரச்சினையில்லை என்று ஆஸ்திரேலியாவின் விளையாட்டு பிரதிநிதிக் குழுவினர் ஒருவர் இன்று கூறினார்.