ஹங்கேரி மற்றும் பல்கேரிய அரசுகளின் அழைப்பை ஏற்று, சீனாவின் சிச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் ஆகஸ்டு திங்கள் 4ம் நாள் தொடக்கம் 25ம் நாள் வரை இவ்விரு நாடுகளில் நலவுதவிப் பயணம் மேற்கொள்வர். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லியு சியான்சௌ இதைத் தெரிவித்தார்.
சீனாவுடன் பாரம்பரிய நட்புறவைக் கொண்ட ஹங்கேரியும் பல்கேரியாவும், நவ சீனாவுடன் மிக முன்னதாக தூதாண்மை உறவை நிறுவிய நாடுகளாகும். இரு நாட்டு அரசுகளின் இந்த அழைப்பு, இரு நாட்டு மக்களுக்கும் சீன மக்களுக்குமிடையிலான நட்புறவை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து, சீனா நன்றியும் பாராட்டும் தெரிவித்தது என்று லியு சியான்சௌ கூறினார். இரு நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்களிடை பரஸ்பரப் புரிந்துணர்வு மற்றும் நட்புறவை, இந்த நலவுதவி நடவடிக்கை மேலும் அதிகரித்து, இரு தரப்புறவின் ஆழமான வளர்ச்சியை முன்னேற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
|