சீனாவின் எலுன்க்ஷுன் இன மக்கள், முக்கியமாக உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் hulunbeier நகரிலும், Heilongjiang மாநிலத்தின் huma,xunke முதலிய வட்டங்களிலும் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, 6900க்கு மேலாகும்.
எலுன்க்ஷுன் இனத்தின் பெயர், முதலில் ச்சிங் வம்சத்தின் தொடக்கக் கட்டத்தில் தோன்றியது. எலுன்க்ஷுன், மான்களைப் பயன்படுத்தவர்கள், மலைகளில் வாழ்ந்தவர்கள் ஆகிய 2 பொருட்களைக் கொண்டது.

எலுன்க்ஷுன் இனத்திற்கு, சொந்த மொழி உண்டு. இது, Altic மொழி குடும்பத்தின் gu si tong கிளையைச் சேர்ந்தது. ஆனால் சொந்த எழுத்துக்கள் இல்லை. அவர்கள் பொதுவாக சீன மொழி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் sa man இனத்தை நம்பி இயற்கையை வழிபடுகின்றனர்.
விடுதலை பெறும் முன், எலுன்க்ஷுன் இனம், ஆதிகால சமூகத்தில் இருந்தது. அவர்கள், கூட்டாக வேட்டையாடினார். உணவுகள் திரட்டல், மீன்பிடிப்பு ஆகியவற்றையும் துணையாக செய்கின்றனர். கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளுக்கு பின், சீன அரசின் ஆதரவுடன், அவர்கள் காடுகளை விட்டு, வேளாண்துறையிலும் தொழிற்துறையில் ஈடுபடத் தொடங்கினர்.

எலுன்க்ஷுன் இனப் பிரதேசம், சீனாவின் முக்கிய காடு தொழிற்துறை தளமாக மாறியுள்ளது.
எலுன்க்ஷுன் இனத்தின் கைவினை தொழிலும் வளர்ந்த நிலையில் இருநத்து. தோல் மற்றும் Birch பட்டை உற்பத்தி பொருட்கள் மிக புகழ் பெற்றவை.
முன்பு, எலுன்க்ஷுன் இன மக்கள், மூதாதையர்களையும் இயற்கையையும் வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டின் கடைசி திங்கள் 23ம் நாளிலும், வசந்த விழாவிலும், குடும்பங்கள், தீ கடவுளை வழிபடுகின்றனர்.

கூடாரத்தீக்கு முன் சாம்பிராணி நெருப்பி, ஒரு இறைச்சி துண்டையும் ஒரு கோப்பை மதுபானத்தையும் தீயில் வைக்கின்றனர். விருந்தினர்கள் வந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த போது, தீயை முதலில் வழிபட வேண்டும்.
எலுன்க்ஷுன் இன மக்களுக்கு விருந்தோம்பல் அதிகம். இறைச்சி, மதுபானம் முதலியவை அளித்த அதே வேளையில், வருந்தினர் விட்டும் போது, சிறப்பு வாய்ந்த உள்ளூர் சிறப்பு பொருட்களையும் அளிக்கின்றனர்.
|